உனக்குப் போல யாருக்குக் குரல் வளம் இருக்கும்?
அரசவையில் பாடும் பாடகன் என்றால் சும்மாவா?
அதுவும் நீ புகழ்பெற்ற நந்தி மன்னனின் அரசவையில் பாடும் பாணன்.
நேற்று இரவு நீ பாடிய பாடல் எங்கள் வீட்டிற்குக் கேட்டது.
அந்தப் பாடலைக் கேட்ட எங்கம்மா "காட்டில் ஏதோ பேய் அலறுகிறது போல" என்று கூறினாள்.
வீட்டில் இருந்த மற்றவர்கள் எல்லாம் "பேயெல்லாம் இல்லை, நரி தான் ஊளையிடுகிறது" என்று கூறினார்கள்.
என் தோழியோ "அது நரியல்லடி நாய் குரைக்கிற சப்தம்" என்று கூறினாள்.
நான் தான் அவர்களிடம் "அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ தான் பாடியிருப்பாய்" என்று தெளிவுபடுத்தினேன்.
உன்னுடைய குரல் வளம் எனக்குத் தெரியும் அல்லவா!
ஈட்டு புகழ்நந்தி பாண!நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நா.
Comments
Post a Comment
Your feedback