குறுவினா
இயல் 1
1. நடைஅழகியல்பற்றித்தொல்காப்பியம்கூறும்கருத்தைக் குறிப்பிடுக.
*‘நடைபெற்றியலும்’ (கிளவியாக்கம், 26) என்றும்
‘நடைநவின்றொழுகும்’ (செய். 135) என்றும் சில சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டிருக்கிறது.
*கவிதையின் இயங்காற்றல் தான் நடை என்கிறது தொல்காப்பியம்.
*மொழிக்குள் இருக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றல் கவிதைக்காக,
இலக்கியத்துக்காக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே நடை எனப்படும்.
2. “படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான் பேக”– இச்சங்கக் கவிதையின் அடிகளில் ஓசைநயமிக்க சொற்களையும்
அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்துஎழுதுக.
ஓசைநயமிக்க சொற்கள்
படாஅம்ஈத்த, கெடாஅநல்லிசை, கடாஅயானை, நல்லிசை
ஓசைநயமிக்க சொற்கள்
·
படாஅம், கெடாஅ, கடாஅ –
செய்யுளிசையளபெடைகள்
·
ஈத்த – பெயரெச்சம்
·
நல்லிசை – பண்புத்தொகை
3. கவிஞர் சிற்பி எவற்றை வியந்துபாட,
தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட
தோள் வீற்றிருக்கும் வியர்வை முத்துகளைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.
4. விடியல், வனப்பு –இரு சொற்களையும்
ஒருங்கிணைத்துத் தொடர்அமைக்க.
பூத்துக் குலுங்கும் பூக்களின் மணத்திலும் பறவைகளின் ஒலிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின் தோற்றம் வனப்பை எடுத்துரைக்கும்.
இயல் 2:
1.‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத் தொடர்
வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என்னும் முழக்கத்
தொடர் வாயிலாக பின்வருவனவற்றை எடுத்துரைப்பேன்.
* மழைக்கு ஆதாரம் மரம்
* உயிர்வளிக்கு உதவுவது மரம்
*மண்அரிப்பைத் தடுக்கும் மரம்
*மரம் தரும் நிழல் குளிர்ச்சி என்று கூறுவேன்.
2.இனநிரை – பிரித்துபுணர்ச்சிவிதிஎழுதுக
இனநிரை = இனம் + நிரை
“மவ்வீறு ஒற்றழிந்து உ யிரீறுஒப்பவும்” என்ற விதிப்படி “இனநிரை” என்றாயிற்று
3. மனிதன் தன் பேராசை காரணமாக
இயற்கை வளங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான்
– இரு தொடர்களாக்குக.
*மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாகச்
சேதப்படுத்தினான்.
*மனிதன் இயற்கை வளங்களைச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று
சந்தித்துக்கொண்டிருக்கிறான்.
4.‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’
– விளக்கம் தருக.
*மழைமேகத்தால் நகரம் இருள் சூழ்ந்தது. பெய்யென மழை பெய்தது.
*திடீரென சூரியன் தோன்ற மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம்
பிரகாசமாய்க் காட்சியளிக்கிறது.
*சில மழைத்துளிகளின் மீது படுகின்ற சூரியக் கதிர்களின்
பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கிறது.
இயல் 3
1. புக்கில், தன்மனை –
சிறுகுறிப்பு எழுதுக.
புக்கில்
புக்கில் தற்காலிகத் தங்குமிடத்தை குறிப்பதாகும்.
“துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்”
என்ற புறநானூறு (222:6) பாடல் சான்றாகும்.
தன்மனை
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும்
பெற்றோரிடம் இருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் ‘தன்மனை’ என வழங்கப்பெறுகிறது.
2. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும்
கருத்து யாது?
நிலையாமை என்பது உலகவாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிக்கும்.
“என் பொய்யான உலகப்பற்று அழிந்தது; என்பிறவி ஒழிந்தது”
என்று சவரி நிலையாமை குறித்துக் கூறுகிறார்.
3.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன்
ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள்
அனைத்தையும் ஆனந்தம், மனச்சோர்வு, அற்பத்தனம், விழிப்புணர்வு என்று உருவகப்படுத்திகிறார்.
இவைகளை நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக எண்ணவேண்டும்.
இவ்வாறு எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன்ரூமி
உருவகப்படுத்துகிறார்.
4. ‘துன்புஉளது எனின் அன்றோ சுகம்உளது
’ என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?
அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆ. சிறு துரும்பும் பல் குத்த உதவும்
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழிக்கு இப்பாடலடிகள் பொருந்தும்.
விளக்கம் :
குகனின் வருத்தத்தை உணர்ந்த இராமன் கூறியது. துன்பம் என்று ஒன்று இருந்தால்
இன்பம் என்பது புலப்படும் – என்பதே பொருத்தம்.
கற்பவை கற்றபின்
1. முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர்
யாரைச் சுட்டுகிறார்?
அறத்தின் வழியாக இல்லற வாழ்க்கை வாழ்பவர் முயல்வாருள் எல்லாம் தலையானவர்.
2. ஞாலத்தின் பெரியது எது?
உரிய காலத்தில் ஒருவர் செய்த உதவி அளவில் சிறியதாக இருந்தாலும், அது உலகத்தின்
அளவை விட மிகப் பெரியதாகும்.
3. மறக்கக்கூடாதது, மறக்கக்கூடியது எவற்றை?
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதன்று ; அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிடுவது நல்லது.
மறக்கக்கூடாதது – நல்லது
மறக்கக்கூடியது – தீமை
4. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம்
உரைப்பன யாவை?
ஒருவருடைய செல்வம் குறையாமலிருக்க வழி எது என்றால், அவர் பிறருடைய கைப்பொருளை
விரும்பாதிருத்தலாகும்.
5. சினத்தை ஏன் காக்க வேண்டும்?
ஒருவர் தன்னைத் தான் காத்துக்கொள்ள விரும்பினால், சினம் வாராமல் காத்துக்
கொள்ள வேண்டும்; காக்காவிட்டால், சினம் நம்மையே அழித்துவிடும்.
இயல் 4
1.இடையீடு – எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?
இடையீடு என்ற கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த
எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை
போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.
2.வசனம், கவிதை வேறுபாடு தருக.
வசனம்
எதுகை, மோனை சேர்க்காமல், அடி என்ற அளவு
இல்லாமல் எழுதுகின்ற வடிவம் வசனமாகும்.
கவிதை
எதுகை, மோனை சேர்த்து, அடிக்கென்று எல்லை
வைத்து எழுதப்படுவதே கவிதையாகும்.
3.‘எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’
– யார்க்கு?
*கலைத்தொழில் செய்வோருக்கு சோறு தட்டாது கிட்டும்.
*கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில்
எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.
4.
அக்காலத்துக் கல்வி முறையில் மனனப்பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
*தமிழில் : நிகண்டு, நன்னூல், காரிகை,
தண்டியலங்காரம், நீதிநூல்கள்
*கணித்தில் : கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம்,
குழிமாற்று முதலிய பலவகை வாய்ப்பாடுகள்
* “தலைகீழ்ப்பாடம்” என்ற முறையும் உண்டு.
*ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற அகராதி
வடிவில் அமைந்த நூல்கள் நினைவாற்றலை வளர்க்க உதவின.
இயல் 5
1.கலிவிழா, ஒலிவிழா
விளக்கம்தருக.
கலிவிழா – திருமயிலையில் கொண்டாடப்படும்
எழுச்சிமிக்க விழா.
ஒலிவிழா – கபாலீச்சரம் இறைவனுக்குப் பூசையிடும்
பங்குனி உத்திர ஆராவார விழா.
2.கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து
எழுதுக.
காலின்மெக்கனிசியின் தொகுப்புகளைக் கொண்டு 1869-ல் உருவாக்கப்பட்ட
நூலகம்.
ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும்தொகுப்பு
காணப்படுகிறது.
3.‘தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலமோங்கு கந்தவேளே’ –
தொடருக்குப் பதவுரை எழுதுக.
*அறம் செய்வார் நிறைந்திருக்கும் சென்னையின்
கந்தக் கோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே!
இயல் 6:
1. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
·
நகை (சிரிப்பு)
·
அழுகை
·
இளிவரல் (சிறுமை)
·
மருட்கை (வியப்பு)
·
அச்சம் (பயம்)
·
பெருமிதம் (பெருமை)
·
வெகுளி (சினம்)
·
உவகை (மகிழ்ச்சி)
2.பின்னணி இசை படத்தின் காட்சியமைப்புக்கு
எவ்வாறு உயிரூட்டும்? சான்று தருக.
பின்னணி இசை, திரைப்படத்தின் உணர்வுகளை வெளிக்கொணர உதவும் மற்றொரு கலை.
பின்னணி இசைச்சேர்ப்பு, மவுனம் இவ்விரண்டும் சில வேளைகளில் திரையில் உணர்வுகளை வெளிக்கொணர உதவுகின்றன.
இசை, பாத்திரங்களின் மனக்கவலைகள், அலைக்கழிப்புகள் ஆகியவற்றை
எதிரொலிப்பதாகவும் இருக்க வேண்டும்.
3.ஒருமுக எழினி, பொருமுக எழினி –
குறிப்புஎழுதுக.
ஒருமுக எழினி
நாட்டிய மேடையின் ஒருபுறத்திலிருந்து மற்றொரு
புறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் முகத்திரை ஒருமுகஎழினி.
பொருமுக எழினி
மேடையின் இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு
ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படுவது பொருமுகத்திரை
4.‘மூச்சு நின்றுவிட்டால்
பேச்சும்
அடங்கும்’ – கவிதைக்குப் பொருத்தமான பழமொழி
ஒன்றை எழுதுக.
“எரிவதை நிறுத்தினால் கொதிப்பது தானே அடங்கும்”
கற்பவைகற்றபின்
1. மனத்தை அதன் போக்கில் செல்ல விடக்கூடாது என்று வள்ளுவம் கூறுவது ஏன்?
சென்றஇடத்தால்செலவிடாதீதுஒரீஇ
நன்றின்பால்உய்ப்பதுஅறிவு.
மனத்தை அது போகும் போக்கில் செல்ல விடக்கூடாது. மேலும் மனத்தினை தீமை வழியிலிருந்து விலக்கி நல்ல வழியில்செலுத்துவதே அறிவாகும்.
2. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து –
இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
உவமை :ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது.
உவமேயம் :பெரிய தேர்க்குச் சிறு அச்சாணி தான் இன்றியமையாதது.
பொருத்தம் : சிறு அச்சாணி தான் என்று எளிமையாக எண்ணக்கூடாது. அதுபோல ஒருவரின் தோற்றத்தை வைத்து எளிமையாக எண்ணக்கூடாது.
3. மனஉறுதியின் தேவை பற்றித் திருக்குறள் யாது கூறுகிறது?
நல்ல செயல்பாட்டிற்கு மனஉறுதியே வேண்டும்; மற்றவை எல்லாம் பயன்படா.
4. நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்?
கள்ளுண்பவரை வள்ளுவர் “நஞ்சுண்பவர்” என இடித்துரைக்கிறார்.
5. அரசரோடு நட்புப் பாராட்டினாலும் செய்யத்தகாதன யாவை?
அரசரோடு நட்புப் பாராட்டினாலும், அப்பழக்கம் காரணமாக அதிகமாக எல்லை மீறிப் பாராட்டுவது, நற்பலனைத் தராது; கேட்டினையே செய்யும்.
6. பகைவராலும் அழிக்க முடியாத அரண் எது?
பகைவராலும் அழிக்க முடியாத அரண் என்பது அறிவுடைமையாகும்.
7. அஞ்சத் தகுந்தன, அஞ்சத் தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது?
வாளைப் போல் வெளிப்படையாகத் துன்பம் செய்யும் பகைவருக்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால் உறவுடையவர் போல் நடித்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்சவேண்டும்.
8. வறுமையும் சிறுமையும் தருவது எது?
வறுமையும் சிறுமையும் தருவது ஒருவருக்கு துன்பம் பல உண்டாக்கி அவருடைய புகழையும் கெடுக்கிற சூது ஆகும்.
9. நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடவும்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
பிடித்தற்குகாரணம்
ஒருவர் என்ன சொன்னாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாவிட்டால் அது நமக்கே தீமையில் முடியும் என்பதாகும்.
10. உலகத்தில் சிறந்த துணையாகவும் பகையாகவும் வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
நல்ல இனத்தை விடச் சிறந்த துணை உலகத்தில் இல்லை. தீய இனத்தை விடத் துன்பத்தைத் தரும் பகையும் இல்லை.
11. இலக்கணக்குறிப்புத்தருக.
ஒரீஇ – சொல்லிசைஅளபெடை
படுப்பதூஉம் – இன்னிசைஅளபெடை
சொல்லுதல் – தொழிற்பெயர்
12. கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇயற்று – பொருள்கூறுக.
நீரில் மூழ்கியவனைத் தீப்பந்தம் கொண்டு தேடுவது போன்றது.
13. பெருந்தேர் – புணர்ச்சி விதி கூறுக.
பெருந்தேர் = பெருமை + தேர் “ஈறுபோதல்” என்றவிதிப்படி “மை” கெட்டு “பெரு + தேர்” என்றாயிற்றது. “இனமிகல்” என்றவிதிப்படி “பெருந்தேர்” என்றாயிற்றது
இயல் 7
1. பருவத்தே பயிர் செய் – நேர மேலாண்மையோடு
பொருத்தி எழுதுக.
*சரியான காலத்தில் பட்டம் என்பதைப் பருவம் என்பர்.
*“பருவத்தே பயிர் செய்” என்பது அனுபவச் சொல்.
*ஆழ்ந்து யோசித்தால் பயிருக்கு மட்டுமன்று; பயிர் செய்யும்
மனித குலத்துக்கும் பொருந்தும்.
*பருவத்தே செய்யவேண்டிய செயல்களில் முக்கியமானது பள்ளிக்குச்
செல்வது – கற்க வேண்டிய பருவத்தில் கற்று வாழ்க்கையைச் செம்மைப்படுத்தல் வேண்டும்.
2) எந்தவொரு பொருளைப் பயன்படுத்தும்போதும்
அதற்குப் பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை நாம் சிந்திப்பதில்லை. ஒரு தேநீரைப் பருகும்போது
அதற்குப் பின்னால் உள்ள மனிதஉழைப்பைச் சிந்தித்து உங்கள் கருத்தை எழுதுக
*நாம் உழைக்கின்றபோது உழைப்பின் சுவையை “நா”
அறியாது.
*ஆனால் தேநீரைப் பருகும்போது அதன் சுவையை “நா”
உணர்வது மட்டுமல்லாமல் உடல்புத்துணர்ச்சி பெற்று நம் மனதைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
*அதாவது நமக்கு முன்னர் காலையில் எழுந்து தேநீருக்குத்
தேவையானவற்றைத் தயார்செய்து கொடுக்கும் தாயாரின் உழைப்பை நாம் சிந்திக்கிறோம்.
3.அறிவுடை வேந்தனின் நெறிகுறித்து,
பிசிராந்தையார் கூறுவன யாவை?
*அறிவுடை அரசன் வரி திரட்டும் முறை அறிந்து மக்களிடம்
வரி திரட்டினால், நாடு கோடிக்கணக்கில் செல்வம் பெற்று செழிப்படையும்.
*அறிவில் குறைந்து முறைதெரியாது வரிதிரட்டினால் நாடு யானை
புகுந்த நிலம் போல் ஆகிவிடும்
4.செவியறிவுறூஉத் துறையை விளக்குக.
அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறை தவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்,
செவியறிவுறூஉ என்னும் துறையாகும்.
இயல் 8
1. ’தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’
நூல் பற்றிக் குறிப்பு வரைக.
*அழகுக் கலைகள் பற்றித்
தமிழில் வெளிவந்த முழுமையான நூல்.
*தமிழரது கலைத்திறனை எடுத்தோதுவதாக
அமையும் நூல்.
*தமிழக அரசின் முதற்பரிசைப்
பெற்ற நூல்.
2.’விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வதொன்றே
உயிர்ப்பணியாகக் கொண்டோன்’ – யார், யாரைப்பற்றி,
எதற்காகக் கூறுகிறார்?
*பாவேந்தர் பாரதிதாசன் வேங்கடசாமியைப் பற்றிக் கூறுகிறார்.
*தமிழ்கெட நேர்ந்தபோது தமிழ்ப்பணியை உயிர்ப்பணியாகக்
கொண்டு தமிழரின் மேன்மையை ஓங்கிடச்செய்தல் வேண்டும் என்று கூறுகிறார்.
3.முகம் முகவரியற்றுப் போனதற்கு சுகந்தி சுப்பிரமணியன் கூறும் காரணத்தை
எழுதுக.
எனக்குள்ளே என்னைத் தொலைத்த காரணத்தால்
என் முகவரியற்றுப்போனது என்கிறார்.
4.இறைமகனாரின்இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம்
புலம்பினர்?
*இவ்வுலகம் பிளந்து வெடிக்கவில்லையே!
*‘வானம் இடிந்து விழவில்லையே!
*‘கடல் நீர் வற்றிப் போகவில்லையே!
*உலகம் அழியவில்லையே! எனப் புலம்பினர்.
Comments
Post a Comment
Your feedback