Skip to main content

12 Tamil Objective one mark questions.

 UNIT 1

 1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்

a.      யாப்பருங்கலக் காரிகை

b.     தண்டியலங்காரம்

c.      தொல்காப்பியம்

d.     நன்னூல்

விடை :தொல்காப்பியம்

2. மீண்டுமந்தப் பழமை நலம் புதுக்குதற்குகவிஞர் குறிப்பிடும் பழமை நலம்,

௧) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
௨) 
பொதிகையில் தோன்றியது
௩) 
வள்ளல்களைத் தந்தது

1.கமட்டும்சரி

2.௧, ௨ இரண்டும்சரி

3.௩ மட்டும்சரி

4.௧, ௩ இரண்டும்சரி

விடை : ௧, ௩ இரண்டும்சரி

3. மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
     
தன்னேர் இலாத தமிழ்!” – இவ்வடிகளில் பயின்றுவந்துள்ள தொடை நயம்

a.      அடி மோனை, அடி எதுகை

b.     சீர் மோனை, சீர் எதுகை

c.      அடி எதுகை, சீர் மோனை

d.     சீர் எதுகை, அடி மோனை

விடை :அடி எதுகை, சீர் மோனை

4. கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு.
கருத்து2 : தொடரமைப்பு, சங்கப்பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது.

1.கருத்து 1 சரி

2.கருத்து 2 சரி

3.இரண்டுகருத்தும்சரி

4.கருத்து 1 சரி, 2 தவறு

விடை :இரண்டு கருத்தும் சரி

5. பொருத்துக

) தமிழ்அழகியல்    1.பரலிசு. நெல்லையப்பர்

) நிலவுப்பூ               2. தி.சு. நடராசன்

) கிடை                      3.சிற்பிபாலசுப்பிரமணியம்

3)   ) உய்யும்வழி           4. கி. ராஜநாராயணன்

a.      4, 3, 2, 1

b.     1, 4, 2, 3

c.      2, 4, 1, 3

d.     2, 3, 4, 1

விடை : 2, 3, 4, 1


UNIT 2:

1.பொருத்துக

 

) குரங்குகள்

1) கன்றுகளைத்தவிர்த்தன

) விலங்குகள்

2) மேய்ச்சலைமறந்தன

) பறவைகள்

3) மேய்ச்சலைநடுங்கின

) பசுக்கள்

4) மரங்களிலிருந்துவீழ்ந்தன

a.      1, 3, 4, 2

b.     3, 1, 4, 2

c.      3, 2, 1, 4

d.     2, 1, 3, 4

விடை : 3, 1, 4, 2

2. “பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென” – தடித்த சொல்லின் இலக்கணக் குறிப்பு

a.      வினைத்தொகை

b.     உரிச்சொல்தொடர்

c.      இடைச்சொல்தொடர்

d.     ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

விடை :ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

3. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது

a.      சூரியஒளிக்கதிர்

b.     மழைமேகங்கள்

c.      மழைத்துளிகள்

d.     நீர்நிலைகள்

விடை :மழைத்துளிகள்

4.வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்

1.      பருவநிலை மாற்றம்

2.      மணல் அள்ளுதல்

3.      பாறைகள் இல்லாமை

4.      நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்

விடை :மணல் அள்ளுதல்

5. உலகநாடுகள் மாற்றுஆற்றலை நோக்கிச்சென்றால் மட்டுமே புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும்இத்தொடர் உணர்த்துவது

a.      கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது

b.     பசுமைக் குடில் வாயுக்கள் அதிகமாகிறது

c.      காலநிலை மாறுபடுகிறது

d.     புவியின் இயக்கம் வேறுபடுகிறது

விடை :கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது


UNIT 3

1.சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை ………………

a.      அறவோர், துறவோர்

b.     திருமணமும் குடும்பமும்

c.      மன்றங்களும் அவைகளும்

d.     நிதியமும் சுங்கமும்

விடை :திருமணமும் குடும்பமும்

2. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

) உரிமைத்தாகம்         1. பாரசீகக்கவிஞர்

) அஞ்ஞாடி                     2. பூமணி

) ஜலாலுத்தீன்ரூமி        3. பகதவச்சலபாரதி

 ) தமிழர்குடும்பமுறை 4. சாகித்தியஅகாதெமி

 

a.      2, 4, 3, 1

b.     3, 4, 1, 2

c.      2, 4, 1, 3

d.     2, 3, 4, 1

விடை : 2, 3, 4, 1

3.இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுத்தீன்ரூமி குறிப்பிடுவது

a.      வக்கிரம்

b.     அவமானம்

c.      வஞ்சனை

d.     இவைஅனைத்தும்

விடை :இவைஅனைத்தும்

4.உவாஉற வந்து கூடும்
உடுபதி, இரவி ஒத்தார்” – யார்யார்?

a.      சடாயு, இராமன்

b.     இராமன், குகன்

c.      இராமன், சுக்ரீவன்

d.     இராமன், சவரி

விடை :இராமன், சுக்ரீவன்

5.எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலேஒரு
   
சக்தி பிறக்குது மூச்சினிலே” – என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது

a.      தனிக்குடும்ப முறை

b.     விரிந்த குடும்ப முறை

c.      தாய்வழிச் சமூக முறை

d.     தந்தைவழிச் சமூக முறை

விடை :தந்தைவழிச் சமூக முறை

கற்பவைகற்றபின்

1. படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க

) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஇனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

விடை :

) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லிஇனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

2. கடலின்பெரியது

a.      உற்ற காலத்தில் செய்த உதவி

b.     பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி

c.      தினையளவு செய்த உதவி

விடை :பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி

3. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

நல்லார் நயவர் இருப்ப நயம்இலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம்தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்.

) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

) ஊழில் பெருவலியா உளமற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்

விடை :

) ஊழில் பெருவலியா உளமற்று ஒன்று
சூழினும் தான்முந்து உறும்

4. கீழ்க்காணும்புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளை எழுதுக.

உயர் அலுவலரின் வருகை

அலுவலகமே அல்லாடும்

அவருடைய சினம் அனைவரும் அறிந்ததே

கோப்புகளை விரைந்து முடிக்க

ஒழுங்கு செய்ய

நேரத்தில் இருக்க வேண்டும்

விரைகிறது மனம்

பரபரப்பும் மனவழுத்தமுமாய்

வண்டியை எடுக்கிறேன்

காலைக்கட்டிக் கொள்கிறது குழந்தை

போ அந்தப் பக்கம்

உதறிச் செல்கிறேன் குழந்தையை.

விடை :

செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

5. இலக்கணக் குறிப்புத் தருக.

·         அன்பும் அறமும் – எண்ணும்மை

·         நன்கலம் – பண்புத்தொகை

·         மறத்தல் – தொழிற்பெயர்

·         உலகு – இடவாகுபெயர்

6. பொருள் கூறுக.

·         வெகுளி – கோபம்

·         புணை – தெப்பம்

·         ஏமம் – பாதுகாப்பு

·         திரு – செல்வம்

7. வையகமும் வானகமும் ஆற்றலரிதுஎதற்கு?

a.      செய்யாமல் செய்த உதவி

b.     பயன்தூக்கார் செய்த உதவி

c.      தினைத்துணை நன்றி

d.     காலத்தினால் செய்த நன்றி

விடை :செய்யாமல் செய்த உதவி

8. பகையும் உளவோ பிற? – பொருள் கூறுக.

முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட நமக்கு வேறு பகை இல்லை.

9. செல்லிடத்துபுணர்ச்சிவிதிகூறுக.

செல்லிடத்து = செல் + இடத்து

*“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்என்ற விதிப்படிசெல் + ல் + இடத்துஎன்றாயிற்று

*“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்வேஎன்ற விதிப்படிசெல்லிடத்துஎன்றாயிற்று.

 10. பொருத்துக.

)வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் 1) சேர்ந்தாரைக் கொல்லி

) பயன்தூக்கார் செய்த உதவி               2) ஞாலத்தின் மாணப் பெரிது

) சினம்                                                          3) தெய்வத்துள் வைக்கப் படும்

) காலத்தினாற் செய்த நன்றி                 4) நன்மை கடலின் பெரிது

a.      4, 3, 2, 1

b.     3, 4, 1, 2

c.      1, 2, 3, 4

d.     2, 3, 4, 1

விடை : 3, 4, 1, 2

UNIT 4

1.காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை” – இத்தொடரில்கலன்உணர்த்தும் பொருள்

a.      போர்க்கருவி

b.     தச்சுக்கருவி

c.      இசைக்கருவி

d.     வேளாண்கருவி

விடை :இசைக்கருவி

2.சுரதா நடத்திய கவிதை இதழ்

a.      இலக்கியம்

b.     காவியம்

c.      ஊர்வலம்

d.     விண்மீன்

விடை :காவியம்

2. விண்வேறு; விண்வெளியில் இயங்குகின்ற
     
வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு – இத்தொடர் தரும் முழுமையான பொருள்:

a.      விண்ணும் வெண்மதியும் வேறுவேறு

b.     விண்வெளியும் செங்கதிரும் வேறுவேறு

c.      வெண்மதியும் முகிலும் வேறுவேறு

d.     விண், விண்வெளியில்உள்ளவெண்மதி, செங்கதிர், முகில்அனைத்தும்வேறுவேறு

விடை :விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

4.சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

a.      வசம்பு

b.     மணத்தக்காளியிலைச் சாறு

c.      கடுக்காய்

d.     மாவிலைக்கரி

விடை :கடுக்காய்

5.குழிமாற்றுஎந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?

a.      இலக்கியம்

b.     கணிதம்

c.      புவியியல்

d.     வேளாண்மை

விடை :கணிதம்


UNIT 5

1) சென்னைவெறும்நகரம்மட்டுமல்ல, அதுநம்பிக்கைமையம்காரணம்

a.      நேரடி, மறைமுகவேலைவாய்ப்புகளின்களம்

b.     மென்பொருள், வன்பொருள், வாகனஉற்பத்தியில்பங்கு

c.      மென்பொருள்ஏற்றுமதியில்முன்னிலை

d.     , , அனைத்தும்

விடை :, , அனைத்தும்

2) கூற்றுஇந்தியாவின்பலபகுதிகளில்இருந்தும்நெசவாளர்கள்சென்னைநோக்கிவந்தனர்.
காரணம்கிழக்கிந்தியநிறுவனத்தின்வணிகம், துணிசார்ந்ததாகவேஇருந்தது.

a.      கூற்றுசரி, காரணம்தவறு

b.     கூற்றுதவறு, காரணம்சரி

c.      கூற்றுதவறு, காரணம்தவறு

d.     கூற்றுசரி, காரணம்சரி

விடைகூற்றுசரி, காரணம்சரி

3. பொருத்துக.

) திருவல்லிக்கேணிஆறு

1) மாவலிபுரச்செலவு

) பக்கிங்காம்கால்வாய்

2) கல்கோடரி

) பல்லாவரம்

3) அருங்காட்சியகம்

) எழும்பூர்

4) கூவம்

a.      1, 2, 4, 3

b.     4, 2, 1, 3

c.      4, 1, 2, 3

d.     2, 4, 3, 1

விடை : 4, 1, 2, 3

4.உள்ளொன்றுவைத்துப்புறம்பாென்றுபேசுவார்’ – இத்தொடர்உணர்த்தும்பண்பு

a.      நேர்மறைப்பண்பு

b.     எதிர்மறைப்பண்பு

c.      முரண்பண்பு

d.     இவைஅனைத்தும்

விடை :முரண்பண்பு

5.விளியறிஞமலி’ – இதில்குறிப்பிடப்படும்விலங்குஎது?

a.      எருது

b.     குதிரை

c.      நாய்

d.     யாழி

விடை :நாய்


UNIT 6:

1. ஆர்ப்பரிக்கும்கடல்
   
அதன்அடித்தளம்
   
மௌனம்; மகாமௌனம் – அடிகள்புலப்படுத்துவது

a.      இரைச்சல்

b.     குறைகுடம்கூத்தாடும்

c.      நிறைகுடம்நீர்த்தழும்பல்இல்

d.     புறஅசைவுகள்அகத்தினைஅசைக்கஇயலாது.

விடை :நிறைகுடம்நீர்த்தழும்பல்இல்

1. ஏழ்ஆண்டுஇயற்றிஓர்ஈராறுஆண்டில்சூழ்கழல்மன்னற்குக்காட்டல்… தொடர்களில்வெளிப்படும்செய்திகள்

1. மாதவிஏழுஆண்டுகள்வரைநாட்டியம்பயின்றாள்.

2. ஈராறுவயதில்அரங்கேற்றம்செய்யவிரும்பினாள்.

) 1 சரி 2 தவறுஆ) 1 தவறு 2 சரி
) 1 தவறு 2 தவறுஈ) 1 சரி 2 சர

a.      1 சரி, 2 தவறு

b.     1 தவறு, 2 சரி

c.      1 தவறு, 2 தவறு

d.     1 சரி, 2 சரி

விடை : 1 சரி, 2 சரி

2. பொருத்துக.

) ஆமந்திரிகை

1) பட்டத்துயானை

) அரசுஉவா

2) மூங்கில்

) கழஞ்சு

3) இடக்கைவாத்தியம்

) கழை

4) எடைஅளவு

a.      3, 1, 4, 2

b.     4, 2, 1, 3

c.      1, 2, 3, 4

d.     4, 3, 2, 1

விடை : 3, 1, 4, 2

 

4.வேறுபட்டதைக்குறிப்பிடுக.

a.      அண்மைக்காட்சித்துணிப்பு

b.     சேய்மைக்காட்சித்துணிப்பு

c.      நடுக்காட்சித்துணிப்பு

d.     காட்சிமறைவு

விடை :காட்சிமறைவு


கற்பவைகற்றபின்

1. படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
     
திண்ணியர் ஆகப் பெறின்

) உருவுகண்டு எள்ளாமை வேண்டும்உருள் பெருந்தேர்க்கு
     
அச்சாணி அன்னார் உடைத்து.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
     
மற்றைய எல்லாம் பிற.

விடை :

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

2. கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக.

மனமோ மாட்டு வண்டி
பாதையொழுங்கில் போக நினைக்கும் மாடு
இப்படி இருந்தால் எப்படி நகரும்
வாழ்க்கைச் சக்கரம்
ஊர்போகும் பாதையில்
சக்கரம் உருண்டால்
அதுவே அறிவு; அதுவே தெளிவு.

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
     
அவ்வது உறைவது அறிவு.

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
       
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

அறிவற்றம் காக்கும் கருவிசெறு வார்க்கும்
     
உள்ளழிக்கல் ஆகா அரண்.

விடை :

சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

3. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம்மாரி
வறந்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரியார் நட்பு.

பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
     
கெழுதகைமை கேடு தரும்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
       
அதிர வருவதோர் நோய்.

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
     
அல்லல் படுப்பதூஉம் இல்.

விடை :

நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்.

4. அல்லல்படுப்பதூஉம் இல்எவரோடு பழகினால்?

a.      வாள்போல் பகைவர்

b.     மெய்ப்பொருள் காண்பவர்

c.      எண்ணியாங்கு எய்துபவர்

d.     தீயினத்தார்

விடை :தீயினத்தார்

5. திண்ணியர் என்பதன் பொருள்

a.      அறிவுடையவர்

b.     மனஉறுதியுடையவர்

c.      தீக்காய்வார்

d.     அறிவினார்

விடை :மனஉறுதியுடையவர்

6. ஆராய்ந்து சொல்கிறவர்

a.      அரசர்

b.     சொல்லியபடி செய்பவர்

c.      தூதுவர்

d.     உறவினர்

விடை :தூதுவர்

7. பொருத்துக.

) பாம்போடு உடன் உறைந்தற்று

1) தீக்காய்வார்

) செத்தார்

2) சீர்அழிக்கும்சூது

) வறுமை தருவது

3) கள்உண்பவர்

) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார்

4) உடம்பாடுஇலாதவர்

a.      1, 2, 3, 4

b.     2, 3, 4, 1

c.      4, 1, 3, 2

d.     4, 3, 2, 1

விடை : 4, 3, 2, 1

8. நடுங்கும் படியான துன்பம் இல்லாதவர்

a.      வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக்கொள்ளக் கூடியவர்.

b.     மனத்திட்பம் உடையவர்

c.      அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்

d.     சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்.

விடை :வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக்கூடியவர்.

9. எளியது, அரியது என்பன

a.      தீயினத்தின் துணைநல்லினத்தின் துணை

b.     சொல்வதுசொல்லியபடி செய்வது

c.      சிறுமை பல செய்வதுபகைவர் தொடர்பு

d.     மெய்ப்பொருள் காண்பதுஉருவுகண்டு எள்ளாதது

விடை :சொல்வதுசொல்லியபடிசெய்வது

UNIT 7

1.‘பலர்துஞ்சவும்தாம்துஞ்சான்’-விழித்திருந்தவரும்அவரைப்பாடியவரும்

a.      சோழன்நெடுங்கிள்ளியை, பாணர்

b.     சோழன்நலங்கிள்ளியை, கோவூர்கிழார்

c.      கணைக்கால்இரும்பொறையை, கபிலர்

d.     கரிகாலனை, உருத்திரங்கண்ணனார்

விடை :சோழன்நலங்கிள்ளியை, கோவூர்கிழார்

2.அதிசயமலரின்புன்னகையைப்பிடித்தவாறுதமிழ்நதிகடக்கச்சொல்வது 

a.      கடந்தகாலத்துயரங்களை

b.     ஆட்களற்றபொழுதை

c.      பச்சையம்இழந்தநிலத்தை

d.     அனைத்தையும்

விடை :அனைத்தையும்

3.முச்சந்திஇலக்கியம்என்பது

கூற்று 1: கதைவடிவிலானவடிவம்உடையது
கூற்று 2: பெரியஎழுத்துப்புத்தகம்என்றுஅழைக்கப்படுவது

a.      கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

b.     கூற்று 1, 2 சரி

c.      கூற்று 1, 2 தவறு

d.     கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

விடை :கூற்று 1, 2 சரி

4.உண்டுபிறந்துவளர்ந்தஇடந்தனில்இத்தொடரில்பெயரெச்சம்

a.      உண்டு

b.     பிறந்து

c.      வளர்ந்த

d.     இடந்தனில்

விடை :வளர்ந்த

5.யானைபுக்கபுலம்போலஇவ்வுவமைக்குப்பொருத்தமானதொடர்

a.      தனக்குப்பயன்படும் ,பிறருக்குப்பயன்படாது

b.     தனக்கும்பயன்படாது, பிறருக்கும்பயன்படாது

c.      பிறருக்குப்பயன்படும், தனக்குப்பயன்படாது

d.     தனக்கும்பயன்படும், பிறருக்கும்பயன்படும்

விடை :தனக்குப்பயன்படும் , பிறருக்குப்பயன்படாது


UNIT 8

1. பொருந்தாதஒன்றைக்கண்டறிக.

a.      தனித்தமிழ்த்தந்தைமு. வரதராசனார்

b.     ஆராய்ச்சிப்பேரறிஞர்மயிலைசீனி. வேங்கடசாமி

c.      தமிழ்த்தென்றல்திரு.வி..

d.     மொழிஞாயிறுதேவநேயப்பாவாணர்

விடை :தனித்தமிழ்த்தந்தைமு. வரதராசனார்

2. ..சற்குணரின்உரையைக்கேட்டுத்தூண்டப்பெற்றமயிலைசீனி. வேங்கடசாமிஎழுதியநூல்

a.      பெளத்தமும்தமிழும்

b.     இசுலாமும்தமிழும்

c.      சமணமும்தமிழும்

d.     கிறித்தவமும்தமிழும்

விடை :கிறித்தவமும்தமிழும்

5.நான்வெற்றுவெளியில்அலைந்துகொண்டிருக்கிறேன்எனதுமுகத்தைத்தேடியபடிஎன்று
சுகந்திசுப்பிரமணியன்தேடுவதாகக்குறிப்பிடுவது

a.      தமதுவீட்டுமுகவரியை

b.     தமதுகுடும்பத்தை

c.      தமதுஅடையாளத்தை

d.     தமதுபடைப்புகளை

விடை :தமதுஅடையாளத்தை


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...