12 ஆம் வகுப்பு புணர்ச்சி விதி
பூம்பாவாய் = பூ+பாவாய்
1: பூப்பெயர் முன் இன
மென்மையும் தோன்றும். : பூம்பாவாய்
இனநிரை = இனம் + நிரை
1: மவ்வீறு ஒற்றழிந்து
உயிரீறு ஒப்பவும்: -இனநிரை
எத்திசை= எ + திசை
1 : இயல்பினும்
விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் – எத்திசை
தலைக்கோல் = தலை + கோல்
1 இயல்பினும் விதியினும்
நின்ற உயிர்முன் க ச த ப மிகும் - தலைக்கோல்
வானமெல்லாம் = வானம் + எல்லாம்
1 : உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - வானமெல்லாம்
உரனுடை = உரன் + உடை
1 : உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது இயல்பே: -உரனுடை
செம்பரிதி = செம்மை + பரிதி
1. ஈறு போதல்: செம் +
பரிதி – செம்பரிதி.
நன்மொழி = நன்மை + மொழி
ஈறு போதல்- நன்மொழி
செந்தமிழே = செம்மை + தமிழே
1: ஈறு போதல் : செம்
+ தமிழே
2 : முன்னின்ற மெய்
திரிதல் – செந்தமிழே
வெங்கதிர் = வெம்மை + கதிர்
1 : ஈறு போதல் : வெம்
+ கதிர்
2 : முன்னின்ற மெய்
திரிதல் : -வெங்கதிர்
புதுப்பெயல் = புதுமை + பெயல்
1 :ஈறுபோதல் - புது + பெயல்
2: இயல்பினும்
விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் -புதுப்பெயல்
அருங்கானம்= அருமை+கானம்;
1:ஈறு போதல் –அரு+கானம்;
2:இனமிகல் – அருங்கானம்
உன்னையல்லால் = உன்னை + அல்லால்
1: இஈஐ வழி
யவ்வும் : உன்னை + ய் + அல்லால்
2: உடல்மேல் உயிர்வந்து
ஒன்றுவது இயல்பே - உன்னையல்லால்
ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
1 : உயிர்வரின்
உக்குறள் மெய் விட்டோடும் - ஆங்க் + அவற்றுள்
2 : உடல்மேல்உயிர்வந்து
ஒன்றுவது இயல்பே - ஆங்கவற்றுள்
தனியாழி = தனி +
ஆழி
1 : இ ஈ ஐ வழி யவ்வும்: தனி
+ ய் + ஆழி
2 : உடல் மேல் உயிர்வந்து
ஒன்றுவது இயல்பே : தனியாழி
ஏழையென = ஏழை+ என
1 : இ ஈ ஐ வழி யவ்வும்;
ஏழை+ ய்+ என
2 : உடல் மேல்
உயிர்வந்து ஒன்றுவது இயல்பே : ஏழையென
செல்லிடத்து - செல் + இடத்து
1 : தனிக்குறில் முன்
ஒற்று உயிர்வரின் இரட்டும்: செல்(ல்+இ)டத்து
2 : உடல் மேல் உயிர்வந்து
ஒன்றுவது இயல்பே : செல்லிடத்து
உள்ளொன்று = உள் + ஒன்று
1 : 'தனிக்குறில் முன்
ஒற்று உயிர்வரின் இரட்டும்' : உள்(ள்
+ ஒ)ன்று
2 : 'உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது இயல்பே': உள்ளொன்று
முன்னுடை = முன் + உடை
1 : 'தனிக்குறில் முன்
ஒற்று உயிர்வரின் இரட்டும்' : முன்ன் + உடை
2 : 'உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது இயல்பே': முன்னுடை
ஒருமையுடன் = ஒருமை + உடன்
1:'இஈஐவழி யவ்வும்': -
ஒருமை + ய் + உடன்
2: 'உடல்மேல்
உயிர்வந்து ஒன்றுவது இயல்பே : ஒருமையுடன்
பெருங்கடல் = பெருமை+கடல்
1. ஈறுபோதல் - பெரு + கடல்
2 இனமிகல் - பெருங்கடல்
பெருந்தேர்= பெருமை + தேர்
1 ஈறுபோதல் - பெரு +தேர்
2 இனமிகல் - பெருந்தேர்
Comments
Post a Comment
Your feedback