எனக்கு ஒன்று தோன்றுகிறது.
ஒவ்வொரு ஆபத்திலும் அதில் ஈடுபடுவது அல்லது ஈடுபடாமல் இருப்பது என்ற இரண்டு வழிகள் உள்ளன.
கடமை உணர்ச்சியால் தூண்டப்பட்டு ஆபத்தில் இறங்குவது வீரமாகும்.
கீழ்த்தர உணர்ச்சிகளின் வசப்பட்டு ஆபத்தில் இறங்குவது கோழைத்தனமாகும்.
தற்பெருமை மற்றும் பண ஆசையால் புதுமை மோகத்தால் தன் உயிரை ஆபத்துக்கு உள்ளாக்கும் ஒருவனை வீரன் என்று சொல்ல முடியாது.
அதற்கு மாறாக தன் குடும்பத்துக்கு தான் செய்ய வேண்டிய கடமை என்னும் கண்ணியமான உணர்ச்சி காரணமாகவோ அல்லது தன் மனசாட்சிக்கு அது ஒவ்வாது என்ற நிலையின் காரணமாகவோ ஆபத்துக்கு ஆளாக மறுக்கும் ஒருவனை கோழை என்று சொல்லி விடவும் முடியாது.
(போர்க் களத்தில் பேசும் ஒரு உரையாடல்)
(A dialogue in the Short story Invasion by Lio Tolstoy)
Comments
Post a Comment
Your feedback