இப்போதெல்லாம் யாரும் வயதாவதை ஏற்றுக்கொள்வதில்லை. நரைத்த முடியை மைபூசிக் கொண்டு இள'மை'யோடு பூரித்துப் போகிறோம்.
இன்னும் சில முதியவர்கள் மை பூசியும் இளமைத்தோற்றம் வராததால் விக்(wig) வைத்துக் கொள்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த விக் வைத்துக் கொள்ளும் பழக்கம் ஐரோப்பாவில் இருந்தது.
முதியோர்கள் மட்டுமல்லாது, சிறு வயதினர் கூட wig வைத்துக் கொள்வதை நாகரீகமாகக் கருதினர். செல்வந்தர்கள் விதவிதமாக wig வைத்துக் கொண்டு அடிக்கடி மாற்றிக்கொண்டனர்.
நீளமாக wig வைத்துக் கொள்வது கௌரவமாகக் கருதப்பட்டது. சமூகத்தில் முக்கியமானவர்கள் நீளமான full length wig வைத்துக்கொள்ள ஆரம்பித்தனர்.
அப்படி பெரிய விக் வைத்துக் கொள்பவர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போவதைப் பார்த்து, இதற்கென ஒரு சட்டம் போட்டார்கள்.
அந்தச் சட்டப்படி நீதிபதிகளும் பிஷப்களும் மட்டுமே பெரிய விக் வைத்துக் கொள்ள முடியும்.
மற்றவர்கள் நீளமாக விக் வைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டது.
எனவே Bigwig persons சமூகத்தில் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டனர். பழைய ஐரோப்பிய ஓவியங்களில் கூட இந்த விக் தலைகளைப் பார்க்கலாம்.
இந்த Bigwig இன்றும் ஆங்கிலத்தில் அப்படியே வழக்கில் உள்ளது.
Bigwig என்றால் someone who holds an important position என்பது பொருள்.
அதாவது Bigwig என்றால் பெரிய மனுஷன் என்று புரிந்து கொள்ளவேண்டும்.
We have invited a few local bigwigs for the inauguration.
Many bigwigs came to his marriage function.
என்பதெல்லாம் சில examples.
நம் நாட்டில் தலைக்கு கருப்பு மை அடிப்பதையும் wig வைப்பதையும் சட்டம் போட்டுத் தடைவிதித்தால் பெரும்பாலான நம் அரசியல் தலைவர்களை யாருக்கும் அடையாளம் தெரியாமல் போய்விடுமில்லையா?

Comments
Post a Comment
Your feedback