மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே
கவிஞர் வாலி எழுதியது இந்தப் பாடல்.
வள்ளலார் எழுதிய திருவருட்பாவில் உள்ள ஒரு பாட்டின் ஓசை இனிமை வாலிக்கு இந்த 'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே' என்ற அடியை எடுத்துக் கொடுத்திருக்கலாம் .
அந்தப் பாடல் இது தான்.
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
(திருவருட்பா)
Comments
Post a Comment
Your feedback