இது ராமாயணத்தின் தாக்கத்தில் பிறந்த ஒரு கவிதை.
மூன்றாவது கை என்ற கவிதைத் தொகுப்பில் உள்ளது இந்தக் கவிதை.
வழி நடந்த
வைதேகி தேவையில்லை
வழியனுப்பும்
வைதேகிகளே தேவை
விதிமுறைகள்
வழிதவறும் போது
வழி நடந்த
வைதேகி தேவையில்லை
(எஸ். சுபா )
சமுதாயத்தில் பின்பற்றப்படும் அறம் அல்லது வழக்கம் என்பது காலம்தோறும் மாறக்கூடியது தான்.
அரியணையில் உட்காரப் போகிறோம் என்று இருந்த நேரத்தில் இனி காட்டு வாழ்க்கை தான் என்றானது ராமனுக்கு.
தான் படும் கஷ்டம் தன் மனைவிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறான்.
ஆனால் வைதேகியோ அரண்மனையோ காடோ எதுவானாலும் கூட நடக்க முடிவு செய்கிறாள்.
அவள் நினைத்தபடி காட்டுக்கும் செல்கிறாள்.
ராமன் செய்தது நியாயம் தான் என்று நினைத்த சீதை (வைதேகி) துன்பத்தில் கூட நடக்கிறாள் .
கணவன் எத்தனை தவறு செய்தாலும் கல்லானாலும் கணவன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
விதிமுறைகள்
வழிதவறும் போது
வழி நடந்த
வைதேகி தேவையில்லை.
என்ற வரிகளில் விடை இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment
Your feedback