பாண்டிய மன்னன் மீது காதல் கொள்கிறாள் ஒரு பெண்.
அதை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. ஏனென்றால் அவளுக்கு ஒரே வெட்கம்.
அதனால் மனதிற்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்கிறாள்.
சில நாள் கழித்து இனிமேலும் அடக்க முடியாது என்பதால் தன் தோழியைக் கூப்பிட்டு பாண்டிய மன்னனிடம் தூது போகச் சொல்கிறாய்.
ஒரு வேகத்தில் அப்படிச் சொல்லிவிட்டாலும் உடனே ஒரு பதட்டம்.
அவனிடம் என்ன சொல்வது என்று கேட்கிறாள் தோழி.
அந்த வெட்கத்தோடு அவள் சொல்லும் பதில் தான் இது.
Point No 1:
பாண்டியனிடம் போய் நான் யார் என்பதைச் சொல்லி விடக்கூடாது.
Point No 2:
என் பெயரையும் சொல்லி விடக்கூடாது.
Point No 3:
நம்முடைய ஊரையும் அவனிடம் சொல்லி விடக்கூடாது.
Point No 4:
"எப்போதுமே என் தாய் என்னைக் காவல் காத்துக் கொண்டே இருப்பாள். என் தாய் பொல்லாதவள்" என்பதையும் பாண்டியனிடம் சொல்லிவிடக் கூடாது.
Point No 5:
ஆனால் நான் அவனுக்காகக் காத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வா.
அந்தத் தோழி பாண்டிய மன்னனிடம் எப்படிச் சொல்லியிருப்பாள், அதற்கு அவன் என்ன பதில் சொல்லியிருப்பான்?
என்னை உரையலென் பேருரையல் ஊருரையல்
அன்னையும் இன்னள் எனஉரையல், பின்னையும்
தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென்
கண்படா ஆறே உரை.
(முத்தொள்ளாயிரம்)
Comments
Post a Comment
Your feedback