என் பிள்ளை மட்டுமா குறும்பு செய்கிறான்?
இந்த ஊரில் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்.
குறும்பு செய்யும் குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
அப்படியிருக்க, ஊருக்குள் யார் என்ன குறும்பு செய்தாலும் 'கண்ணன் தான் செய்தான்' என்று எல்லோரும் உன் மேல் குற்றம் சொல்லுகிறார்கள்.
இப்படி உன் மேல் வேண்டுமென்றே குற்றம் சொல்லும் அவர்களை விட்டு விலகிவிடு கண்ணா!
உன்னை அன்புடன் அழைத்து அரவணைக்கும் எத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள். நீ அவர்கள் இருக்குமிடம் வந்து விளையாடு கண்ணா!
அழகும் சமர்த்தும் பொருந்திய குழந்தை தானே நீ!
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீம்புகள் செய்வார்
எல்லாம்உன் மேலன்றிப் போகாது எம்பிரான்! நீஇங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்! ஞானச் சுடரே! உன்மேனி
சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய்.
(பெரியாழ்வார் - பெரிய திருமொழி)
Comments
Post a Comment
Your feedback