சேர்ந்தே இருப்பது ?
வறுமையும் புலமையும்
என்று ஒரு திரைப்பட வசனம் சொல்லும்.
அந்தக் காலம் தொடங்கி பெரிய பெரிய புலவர்கள் எல்லாம் கொடிய வறுமையில் வாடியிருக்கிறார்கள்.
சங்கப் பாடல் தொடங்கி இப்போது வரை புலமையும் வறுமையும் எப்படியோ பொருந்திப் போய்விட்டது.
இது ஒரு தனிப் பாடல். புலவரின் வறுமையை இப்படிச் சொல்கிறது.
தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மா,
என்னைப் படைத்தபோதே எனக்கு கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கச் சொல்லித்தந்திருக்கவேண்டும்.
இல்லாவிட்டால்,
கையில் கொஞ்சம் தங்கத்தையாவது கொடுத்து என்னைக் காப்பாற்றியிருக்கவேண்டும்.
ஆனால் அந்தக் கடவுள் இந்த இரண்டையும் செய்யாததால் நான் அவதிப்படுகிறேன்.
கொஞ்சம் காசுக்காக இப்படி எல்லாரிடமும் பல்லைக் காண்பித்துப் பிழைக்கும் வாழ்க்கையாகிவிட்டதே!
பாடல் இது தான்.
கல்லைத்தான் மண்ணைத்தான் காச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா!
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் இரட்சித்தானா!
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான் ஐயோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான் பண்ணி னானே!
-இராமச்சந்திர கவிராயர்
தமிழ்ப் புலவர்கள் மட்டும் தான் இப்படி வறுமையில் வாடினார்களா?
Keats ன் வறுமை பற்றி Robert Browning கவிதை சொல்லும்.
Hobbs hints blue,—Straight he turtle eats:
Nobbs prints blue,—claret crowns his cup:
Nokes outdares Stokes in azure feats,—
Both gorge. Who fished the murex up?
What porridge had John Keats?
-Robert Browning
மேலோட்டமாகப் பார்த்தால் கீட்ஸின் கஞ்சிக்கும் நாப்ஸ்,ஹாப்ஸ் போன்றவர்களின் வெரைட்டி வெரைட்டியான உணவுக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும்?
Hobbs, Nokes, Stokes இவர்களெல்லாம் பதிப்பாளர்கள்.
Keats போன்றவர்களின் கவிதைகளை வண்ணமயமாக அச்சிட்டு வெளியிட்டு பணக்காரராக விளங்குபவர்கள்.
ஆனால் அவர்கள் வெளியிடும் கவிதைகளை எழுதிய கீட்ஸ் என்ற கவிஞன் பாவம் இன்னும் கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கிறான்.
இது தான் கவிதை சொல்லும் செய்தி.
Keats இன் பெருமைக்கு எந்த சேதாரமும் வராமல் வறுமைமையைச் சொல்லவேண்டும் என்பதால் கவிதையை ஒரு புதிர் போல மாற்றிக்கொண்டது Browning இன் புலமை.
கவிதை மரபு போல கவிஞனின் ஏழ்மைக்கும் ஒரு தனி மரபு இருக்கும் போல!
Comments
Post a Comment
Your feedback