' திருவிளையாடல்’ திரைப்படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பவர்களுக்கு இந்தப் பாட்டு மனப்பாடமே ஆகியிருக்கும். கொங்கு தே ர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோநீ யறியும் பூவே இது தான் எமது செய்யுள் என சிவாஜி கணேசனின் வசனத்தை ஆறாவது வரியாகச் செய்யுளில் சேர்த்துக் கூறக்கூடாது. இது இறையனார் எழுதியதாக குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள செய்யுள். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்பது சாதாரணமான கேள்வியல்ல. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இல்லை என்று கூறியதால் சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டான் நக்கீரன். அந்தக் காலத்தில் பெண்கள் தங்கள் கூந்தலுக்கு அகில்புகையை ஊட்டிக் கொண்டனர். கூந்தலுக்கு நறுமணம் மிகுந்த எண்ணெய் பூசும் பழக்கமுமிருந்தது. எண்ணெய் பூசாத போதும் அவள் கூந்தல் மணங்கமழும் என்று கூட ஒரு பாடல் கூறுகிறது. மண்ணா வாயின்...