அலுவலகக் கடிதங்கள் எழுதும்போது,
From எழுத அனுப்புனர் என்று எழுதினால் தவறா?
ஏன் அதை அனுப்புநர் என்று மாற்றி எழுதுகிறோம்?
ஒரு சொல், அதைச் செய்பவர் இவர் என்கிற அர்த்தத்தில் பெயர்ச்சொல்லாக
மாறும்போது ‘நர்’ வரும்.
அனுப்புதல் என்பது வினைச்சொல்.
அதை அனுப்புகிறவர் என்ற பொருளில் சொல்லும்போது
‘அனுப்புநர்’ என்று மாறும்.
அதாவது, அதைக் கட்டளைச்
சொல்லாக்கும்போது அது 'உ' ஒலியில் முடிந்தால்
அதை நர் விகுதியோடு சொல்வது சரியானது.
கம்பராமாயணத்தில் வரும் ஒரு பாடல் இது.
வண்மை இல்லை
ஓர் வறுமை இன்மையால்
திண்மை
இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை
பொய் உரை இலாமையால்
ஒண்மை
இல்லை பல் கேள்வி மேவலால்.
செறுதல் என்றால் எதிர்த்தல். சண்டைபோடுதல் என்பது பொருள்.
செறு என்றால் சண்டை போடு என்று அர்த்தம். ‘உ’ ஒலியில் முடிகிறது.
சண்டை
போடுபவரை செறுநர் என்ற சொல்லால் கம்பர் குறிப்பிடுகிறார்.
மேலும் சில உதாரணங்கள்.
பெறுதல் : பெறு : பெறுநர்
ஓட்டுதல் : ஓட்டு: ஓட்டுநர்
இயக்குதல் : இயக்கு :இயக்குநர்
கொல்லுதல்: கொல்லு : கொல்லுநர் (கொல்பவர்)
Comments
Post a Comment
Your feedback