Never question someone’s faith என்று சொல்வார்கள்.
இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்;
பல என்றால் பலவேதான் .
அப்படி அல்ல என்றாலும் அல்லதான்;
அப்படித்தான் என்றால் ஆம்
அப்படித்தான்;
இல்லை என்றாலும் இல்லைதான்;
உண்டு என்றாலும் உண்டுதான்;
எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது.
இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு என்றும் நன்று!
ஒன்றே என்னின் ஒன்றேயாம்,
பல
என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்,
ஆமே
என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்,
உளது
என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ
பிழைப்பம்மா!
(யுத்தகாண்டம், கடவுள்வாழ்த்து)
ஆனால் சிவவாக்கியர் என்ற சித்தர் கேள்வி எழுப்பினார்
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
தெய்வம் நமக்குள்ளே இருக்கும்போது,
ஏன் கல்லை வணங்கவேண்டும் என்கிறார்.
கடவுளை உணர முடிந்த சித்தர்களுக்கு அது சரிதான்.
நம்மைப் போன்றவர்களுக்கு?
ஒருவனுடைய நம்பிக்கையின் சக்தியைப் புரிந்து கொண்டவர்கள் அந்த நம்பிக்கையை
குழப்பவும் சிதைக்கவும் முயற்சிக்க மாட்டார்கள்.
மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத மன அழுத்தத்தைக் கூட கோவில் வழிபாடு
குணப்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம்.
எடுத்துக் கொண்ட முயற்சியில் ஆழமான கவனம் செலுத்த
இறைநம்பிக்கை ஒரு பெரிய சக்தி என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
இறைவழிபாடு குறித்த கேள்விக்கு,
கண்ணதாசன்
இது நம்பிக்கை சார்ந்த விஷயம்
என்கிறார்.
இது எளிமையான ஆனால் ஆழமான பதில்.
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
(கண்ணதாசன்)
Comments
Post a Comment
Your feedback