கேட்டவுடனே மனதிற்குள் திருமண நிகழ்வுகளை கொண்டு வந்து துள்ளலைத் தருகின்ற இந்த பாடல் இளையராஜா இசையில் வாலி எழுதியது.
ஆண்டாள் திருமண நிகழ்வை அப்படியே மனதுக்குள் கொண்டுவந்து வாலி எழுதிய இப்பாடலில் அழகான சொற்கள் விளையாடும்.
தேவதை போல் ஒரு
பெண்ணிங்கு வந்தது நம்பி -
உன்னை நம்பி
இந்த மைத்துனன்
கைத்தலம் பற்றிட வந்தது தம்பி -
தங்கக் கம்பி
பூச்சூடவும்
பாய் போடவும்
சுபவேளை தான்
ஸ்ரீராமன் ஜானகி
பந்தம் இந்த சொந்தம்
தேவாதி தேவரும்
சூழ நலம்வாழ
மூன்று முடி போட
ஆண்டாள் துணை கூட வேதங்களில் பாராயணம்
பூப்பந்தலில் ஆலிங்கனம்
சீதாவைப் பிரித்தது
மான் தான்
புள்ளி மான் தான்
தோதாகச் சேர்ந்தது
மான் தான் அனுமான் தான் நாங்கள் அனுமார்கள்
வாழ்க இளம் மான்கள்
கல்யாணமே வைபோகம் தான்
பூந் தேரிலே ஊர்கோலந் தான்...
கைத்தலம் என்பது இந்தப் பாடலில் வருகின்ற ஒரு சொல்.
ஆண்டாள் பாசுரத்தில் திருமண விழாவைக் காட்டும் அழகான சொல் அது.
ஆலிங்கனம் என்றால் அரவணைத்தல் அல்லது கட்டித் தழுவுதல். புதுமைப் பெண் படத்தில் காதல் மயக்கம் என்று தொடங்குகின்ற ஒரு பாடலில் கூட ஆலிங்கனங்கள் பரவசம்
இங்கு அனுமதி இலவசம் என்ற வரி வரும்.
அடுத்த சொல் பாராயணம். பாராயணம் என்பது மந்திரம் சொல்லி உருவேற்றுதல் என்ற பொருளைத் தரும். சாதாரண மஞ்சள் கயிறு சக்தி மிக்கதாக மாற மந்திரம் சொல்லி உருவேற்றுதலை பாராயணம் என்ற சொல் குறிக்கிறது.
பிரித்த மான் - சீதை முன் அழகாகத் தோன்றியது மாயமான். இந்த மாயத் தோற்றத்தில் வந்த தடுமாற்றம் தான் சீதையை இராமனிடம் இருந்து பிரித்தது.
அனுமான் - ஒரு மாயமான் பிரிக்க, சேர்த்து வைக்க வந்த மான் அனுமான் என்று வார்த்தை ஜாலம் காட்டியிருப்பார் வாலி. நாங்கள் அனுமான்கள் ...என்பது அது. குறும்பாகக் கூட இருக்க மட்டுமல்ல; சோதனைக் காலத்தில் மீண்டு வருவதற்கும் தானே நண்பர்கள்.
அதெல்லாம் சரி இள மான்கள்?
வேறு யார்? கல்யாணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தான்.
Comments
Post a Comment
Your feedback