லாரிகள், பஸ்கள், இன்ஜின்கள், ஏஜென்டுகள்,டாக்டர்கள்,நர்சுகள், டிராக்டர்கள், சர்ட்டுகள், போலீசார், புரோகிதர்கள், என்ஜினீயர்கள், அப்பார்ட்மெண்ட்டுகள், கேரக்டர்கள். இவை எல்லாம் தினமும் நாம் பயன்படுத்தும் சொற்கள்.
கள், அர், ஆர் போன்ற பன்மை விகுதிகளை ஆங்கிலச் சொற்களோடு இணைத்து அது தமிழ் தானே என்று நம்பித் தடுமாறும் அளவுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பிறமொழிச் சொற்களுடன் தமிழில் விகுதிகளும் வேற்றுமை உருபுகளும் இணையக் கூடாது என்பதெல்லாம் அந்த காலத்துத் தமிழ் அறிஞர்கள் ஏற்படுத்தி வைத்த மரபு.
அந்த மரபை நவீன உலகம் அப்படியே பின்பற்றி கொண்டிருக்க முடியுமா என்ன? அதனால்தான் அந்த மரபை காற்றில் விட்டு விட்டோம்.
நாளும் நாளும் புதிய கலைச்சொற்களை நமக்குத் தெரிந்த தமிழில் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றோம்.
ஆங்கிலச் சொல்லை முன்பாகவும் தமிழின் பன்மை விகுதியை அதன் தொடர்ச்சியாகவும் வைத்து உருவாக்கிக்கொண்ட இப்படிப்பட்ட சொற்கள் ஒருபுறமிருக்க, இதைவிட அபத்தமானது ஒன்று இருக்கிறது.
அது,
அழகான தமிழ் சொற்களின் பின் பகுதியை வெட்டி எடுத்துவிட்டு ஆங்கில பன்மையைச் சேர்த்துச் சொல்வது.
குட்டீஸ், கலக்கல்ஸ், வாண்டுஸ், பங்காளிஸ்... இவை எல்லாம் அப்படி ஈவு இரக்கமே இல்லாமல் நாம் உருவாக்கிக் கொண்ட சொற்கள்.
இப்படி எல்லாம் உருவாக்கிக்கொண்ட நம்முடைய சொற்களுக்கும் ஒற்று மிகும் இடங்கள், மிகாத இடங்கள் என இலக்கணத்தை வேறு பொருத்திப் பார்த்துக் கொள்கிறோம்.
'பஸ்சை பிடித்தான்' என ஒற்றுப்பிழையோடு எழுத மனது வராததால்,
'பஸ்சைப் பிடித்தான்' என எழுதி படிப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து விடுகிறோம்.
'டிரைவருக்கு காலில் காயம் இருந்ததால் பிரேக் பிடிக்க முடியவில்லை' என்பது பிழையான தொடர் என்பதால்,
டிரைவருக்குக் காலில்... என ஒற்றுச் சேர்த்து எழுதி சுத்தத் தமிழாக்கிவிட்டால் தான் மனது அமைதியாகிறது.
முன்னோர் நடந்த முறைமுறை வழிகள்
கற்றவர் நாட்டிய காலடிச் சுவடுகள்
ஆன்றோர் வரைந்த அறிவோ வியங்கள்
சான்றோர் தமது தகைசால் பண்புகள்
மானிட சாதியின் மாண்புறு நிலைகள்
நல்லோர் வகுத்த நாகரீ கங்கள்
பொங்கிப் பொலியும் பூமியில் இன்று
புதியதோர் ஆண்டும் பூத்தது என்று
மகிழ்வதா இல்லை மனது துடிப்பதா?
(கண்ணதாசன்)
Comments
Post a Comment
Your feedback