குளத்தில் நீர் இருக்கும்போது நீர்ப் பறவைகள் எல்லாம் சுற்றிச்சுற்றி வருவதைப் பார்த்திருப்போம்.
அதுவும் அந்தக் கொக்கு இருக்கிறதே அது குளத்தின் கரையை விட்டுப் பிரியாமலேயே எந்த நேரமும் ஒற்றைக்காலில் தவமிருப்பதைப் பார்த்து இந்தக் கொக்குக்குத் தான் என் மீது எவ்வளவு பாசம் என்று அந்த அப்பாவிக் குளம் நினைத்திருக்கும்.
அந்தப் பறவைகள் எல்லாம் குளத்தில் நீர் வற்றிய பின்னர் காணாமல் போயிருக்கும்.
எங்கே போயிருக்கும்?
வேறு எங்கு போயிருக்கும்?
தண்ணீர் இருக்கும் இன்னொரு குளத்தைத் தேடிப் போயிருக்கும்.
ஆனால் அங்கிருந்த ஆம்பல் ,நெய்தல்
போன்ற செடி கொடிகளெல்லாம்
எங்கும் போகவில்லையே.
குளம் வற்றிய போதும் கூடவே இருந்த அந்த செடிகொடிகள் தான்மறுபடி நீர் நிரம்பியதும்
அந்தக் குளத்திற்கு அழகு சேர்க்கும்.
குளத்துக்கு கொக்கின் மீதும் குருவிகள் மீதும் இருந்த பிரியம் அங்கிருந்த ஆம்பல், நெய்தல் கொடிகளின் மீது இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
நாம் கொக்கா ? குளமா ?
அல்லது குளத்தோடு என்றும் இருக்கும் கொட்டியும் ஆம்பலுமா?
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு "
(மூதுரை)
.
Comments
Post a Comment
Your feedback