பகுபத
உறுப்பிலக்கணம்
ஈன்ற
= ஈன் + ற் + அ
ஈன் – பகுதி
ற் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
துஞ்சல்
= துஞ்சு + அல்
துஞ்சு – பகுதி
அல் – தொழிற்பெயர் விகுதி
முனிவிலர்
= முனி + வ் + இல் + அர்
முனி – பகுதி
வ் – உடம்படுமெய், சந்தி
இல் – எதிர்மறை இடைநிலை
அர் – பலர்பால் வினைமுற்று விகுதி
மலிந்து
= மலி+ த்(ந்) + த் + உ
மலி – பகுதி
த் – சந்தி
ந்- ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி
நெருங்கின
= நெருங்கு + (இ) ன் + அ
நெருங்கு – பகுதி
(இ) ன் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
பெற்ற
= பெறு (பெற்று) + அ
பெறு – பகுதி
பெற்று – ஒற்று இரட்டித்து இறந்தகாலம் காட்டியது
அ – பெயரெச்ச விகுதி
உண்டான்
= உண் + ட் + ஆன்
உண் – பகுதி
ட் – இறந்தகால இடைநிலை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
அயர்ந்து
= அயர் + த்(ந்) + த் + உ
அயர் – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
உ – வினையெச்ச விகுதி
எழுந்த
= எழு + த்(ந்) + த் + அ
எழு – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
நின்றார்
= நில் (ன்) + ற் + ஆர்
நில் – பகுதி
“ல்” “ன்” ஆனது விகாரம்
ற் – இறந்தகால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
செய்வான்
= செய் + வ் + ஆன்
செய் – பகுதி
வ் – எதிர்கால இடைநிலை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
அழைத்தான்
= அழை + த் + த் + ஆன்
அழை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
வேண்டுகின்றேன்
= வேண்டு + கின்று + ஏன்
வேண்டு – பகுதி
கின்று – நிகழ்கால இடைநிலை
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
ஆழ்க
= ஆழ் + க
ஆழ் – பகுதி
க – வியங்கோள் வினைமுற்று விகுதி
பறித்தார்
= பறி + த் + த் + ஆர்
பறி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
முளைத்த
= முளை + த் + த் + அ
முளை – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
ஏகுமின்
= ஏகு + மின்
ஏகு – பகுதி
மின் – ஏவல் வினைமுற்று விகுதி
விடுத்தனை
= விடு + த் + த் + அன் + ஐ
விடு – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
அன் – சாரியை
ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
சென்ற
= செல் (ன்)+ ற் + அ
செல் – பகுதி
“ல்” “ன்” ஆனது விகாரம்
ற் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி
விளங்கினார் = விளங்கு + இன் + ஆர்
விளங்கு – பகுதி
இன் – இறந்த கால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
பயின்றார் = பயில் + ற் +ஆர்
பயில் – பகுதி
ற் – ல்-ன் ஆனது விகாரம், இறந்தகால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
தொடங்கினார் = தொடங்கு + இன் + அர்
தொடங்கு – பகுதி
இன் – இறந்தகால இடைநிலை
அர் – பலர்பால் வினைமுற்று விகுதி
பதிப்பித்தார் – பதிப்பி + த் + த் + ஆர்
பதிப்பி – பகுதி
த் – சந்தி
த் – இறந்தகால இடைநிலை
ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
ஈட்டினார் = ஈட்டு + இன் + ஆர்
ஈட்டு – பகுதி
இன் – இறந்தகால இடைநிலை
ஆர் – பலர்பால்வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதிகள்
செங்கயல்
= செம்மை + கயல்
“ஈறுபோதல்” என்ற விதிப்படி செம் + கயல் என்றாயிற்று
“முன்னின்ற
மெய் திரிதல்” என்ற விதிப்படி செங்கயல் என்றாயிற்று
கருவிழி
= கருமை + விழி
“ஈறுபோதல்”
எனும் விதிப்படி “மை” விகுதி கெட்டு கருவிழி என்றாயிற்று.
பாசிலை
= பசுமை + இலை
“ஈறுபோதல்” எனும் விதிப்படி “மை” விகுதி கெட்டு “பசு + இலை”
என்றாயிற்று.
“ஆதீநீடல்” எனும் விதிப்படி
“பாசு + இலை” என்றாயிற்று.
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் விதிப்படி “பாச்
+ இலை” என்றாயிற்று.
“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி
“பாசிலை” என்றாயிற்று.
பெருங்கல்
= பெருமை + கல்
“ஈறுபோதல்” எனும் விதிப்படி “மை” விகுதி கெட்டு “பெரு+ கல்”
என்றாயிற்று.
“இனமிகல்” எனும் விதிப்படி “பெருங் + கல் = பெருங்கல்”
என்றாயிற்று
புலனறிவு
= புலன் + அறிவு
“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி
“புலனறிவு” என்றாயிற்று.
வில்லொடிந்து
= வில் + ஒடிந்து
“தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” எனும் விதிப்படி
“வில்ல் + ஒடிந்து” என்றாயிற்று.
“உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி
“வில்லொடிந்து” என்றாயிற்று.
வழியில்லை
= வழி + இல்லை
“இ ஈ ஐ வழி யவ்வும் என்னும் விதிப்படி” எனும் விதிப்படி “வழி +
ய் + இல்லை” என்றாயிற்று.
“உடல்மேல்
உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” எனும் விதிப்படி “வழியில்லை” என்றாயிற்று.
இயைவதாயினும்
= இயைவது + ஆயினும்
“உயிர்வரின் உக்குறள் மெய் விட்டோடும்” என்ற
விதிப்படி இயைவத் + ஆயினும் என்றாயிற்று.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி இயைவதாயினும் என்றாயிற்று.
அருவினை
= அருமை + வினை
“ஈறுபோதல்” என்ற விதிப்படி “அருவினை” என்றாயிற்று
அரும்பொருள்
= அருமை + பொருள்
“ஈறுபோதல்” என்ற விதிப்படி அரு + பொருள் என்றாயிற்று.
“இனமிகல்” என்ற விதிப்படி அரும்பொருள் என்றாயிற்று.
மனையென
= மனை + என
“இ
ஈ ஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி மனை + ய் + என என்றாயிற்று.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ‘மனையென’ என்றாயிற்று.
பயமில்லை = பயம் + இல்லை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “பயமில்லை” என்றாயிற்று.
கற்பொடி = கல் + பொடி
“லள வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” என்ற விதிப்படி “கற்பொடி” என்றாயிற்று.
உலகனைத்தும் = உலகு + அனைத்தும்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” என்ற விதிப்படி “உலக் + அனைத்தும்” என்றாயிற்று.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உலகனைத்தும்” என்றாயிற்று.
திருவடி
= திரு + அடி
“ஏனை உயிர்வழி வவ்வும்” என்ற
விதிப்படி “திரு + வ் + அடி” என்றாயிற்று.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “திருவடி” என்றாயிற்று.
நீரோடை
– நீர் + ஓடை
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “நீரோடை” என்றாயிற்று.
சிற்றூர் – சிறுமை + ஊர்
“ஈறுபோதல்” என்ற விதிப்படி “சிறு + ஊர்” என்றாயிற்று.
“தன்னொற்றிரட்டல்” என்ற
விதிப்படி “சிற்று + ஊர்” என்றாயிற்று.
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “சிற்ற் + ஊர்” என்றாயிற்று.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “சிற்றூர்” என்றாயிற்று.
கற்பிளந்து - கல் + பிளந்து
“ல ள வேற்றுமையில் வலிவரின் றடவும்” என்ற
விதிப்படி “கற்பிளந்து” என்றாயிற்று.
மணிக்குலம் - மணி + குலம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “மணிக்குளம்” என்றாயிற்று.
அமுதென்று - அமுது + என்று
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “அமுத் + என்று” என்றாயிற்று.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “அமுதென்று” என்றாயிற்று.
புகழெனின்- புகழ்
+ எனின்
உடல்மேல் உயிர்வந்து
ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “புகழெனின்” என்றாயிற்று.
புவியாட்சி= புவி+ஆட்சி
“இ ஈ ஐ வழி யவ்வும்”
என்ற விதிப்படி புவி +ய் + ஆட்சி என்றாயிற்று.
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” விதிப்படி ‘புவியாட்சி’
என்றாயிற்று.
இலக்கணக் குறிப்பு
சுடச்சுட – அடுக்குத்தொடர்
உழுதுழுது – அடுக்குத்தொடர்
பார்த்துப் பார்த்து, நில் நில், உழுது உழுது – அடுக்குத்தொடர்கள்
நெறுநெறு – இரட்டைக்கிளவி
செங்கயல், வெண்சங்கு – பண்புத்தொகைகள்
நெடுங்குன்று, பேரன்பு – பண்புத்தொகை
பெரும்புகழ், தெண்டிரை – பண்புத்தொகைகள்
நல்லாடை – பண்புத்தொகை
இளமுகம், நல்லூண், சிறுபுல், பேரழகு, முந்நீர், நன்மண் – பண்புத்தொகைகள்
செய்தொழில், அலைகடல், வீழருவி – வினைத்தொகைகள்
சுடுகாடு, கொல்புலி, குரைகடல் – வினைத்தொகைகள்
அலைகடல் – வினைத்தொகை
முயலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
ஆசிலா, ஓவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்
புல்புழு, இராப்பகல் – உம்மைத்தொகைகள்
புழுக்களும் பூச்சியும் – எண்ணும்மை
மஞ்ஞையும் கொண்டலும் – எண்ணும்மை
தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் – எண்ணும்மைகள்
ஐந்தும் – முற்றும்மை
மாண்ட தவளை – பெயரெச்சம்
மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த – பெயரெச்சங்கள்
பின்னிய, முளைத்த – பெயரெச்சங்கள்
அருளிய – பெயரெச்சம்
·
உருட்டி – வினையெச்சம்
மாநகர், உறுபகை – உரிச்சொற்றொடர்கள்
கடி நகர், சாலத் தகும்– உரிச்சொற்றொடர்கள்
கெடுக – வியங்கோள் வினைமுற்று
ஓதுக, பேசிடுக, ஆழ்க, வாழிய – வியங்கோள் வினைமுற்றுகள்
தமிழ்க்கவிஞர் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
தேன்துளி – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
தங்குதல் – தொழிற்பெயர்
ஒழிதல் – தொழிற்பெயர்
துஞ்சல் – தொழிற்பெயர்
உண்டல்- தொழிற்பெயர்
குறிப்புணர்வார் – வினையாலணையும் பெயர்
காலத்தச்சன் – உருவகம்
மலையலை, குகைமுகம் – உவமைத்தொகைகள்
கொன்றைசூடு – இரண்டாம் வேற்றுமைத்தொகை
சுடச்சுடரும் – மூன்றாம் வேற்றுமைத்தொகை
அகிற்புகை – ஆறாம் வேற்றுமைத்தொகை
அம்ம – அசைநிலை
சுடச்சுடரும் பொன் – எதிர்காலப் பெயரெச்சத் தொடர்
இடன் – ஈற்றுப்போலி
தரும் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
பொன்னகர் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
பூக்குலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
ஏகுமின் – ஏவல் பன்மை வினைமுற்று
ஏகுதி – ஏவல் ஒருமை வினைமுற்று
வாய்க்கால் – இலக்கணப்போலி (முன் பின் தொக்கியது)
Comments
Post a Comment
Your feedback