பலவுள் தெரிக
1. “கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” – அடிமோனையைத் தெரிவு செய்க
- கபாடபுரங்களை
– காவுகொண்ட
- காலத்தால்
– கனிமங்கள்
- கபாடபுரங்களை – காலத்தால்
- காலத்தால்
– சாகாத
2.பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
அ) அ.முத்துலிங்கம்
– யுகத்தின் பாடல்
ஆ) பவணந்தி முனிவர் – நன்னூல்
இ) சு.வில்வரத்தினம்
– ஆறாம்
திணை
ஈ) இந்திரன் – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- அ, ஆ
- அ, ஈ
- ஆ, ஈ
- அ, இ
3.கவிஞர் “ஒரு திரவநிலையில், நாம் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து
- மொழி என்பது திட, திரவ நிலைகளில்
இருக்கும்
- பேச்சுமொழி,
எழுத்துமொழியைத் திட, திரவப் பொருள்களாக உருவகப்படுத்தவில்லை
- எழுத்துமொழியை விடப் பேச்சுமொழி எளிமையானது
- பேச்சுமொழியை
விட எழுத்துமொழி எளிமையானது
4.தவறான இணையைத் தேர்வு செய்க
- மொழி + ஆளுமை : உயிர் + உயிர்
- கடல் + அலை : உயிர் + மெய்
- தமிழ் + உணர்வு : மெய் + உயிர்
- மண் + வளம் : மெய் + மெய்
5.மொழிமுதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க
- அன்னம், கிண்ணம்
- டமாரம், இங்ஙனம்
- ரூபாய், லட்சாதிபதி
- றெக்கை, அங்ஙனம்
6.
பொருத்தமான இலக்கிய வடிவம் எது ____________
- ஏதிலிக் குருவிகள்
– மரபுக் கவிதை
- திருமலை முருகன் பள்ளு – சிறுகதை
- யானை டாக்டர் – குறும்புதினம்
- ஐங்குறுநூறு
– புதுக்கவிதை
7.கூற்று : “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் : “கோடு” என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்ற பொருள்களும் உண்டு
- கூற்று சரி, விளக்கம்
தவறு
- கூற்று சரி, விளக்கமும் சரி
- கூற்று தவறு, விளக்கம்
சரி
- கூற்று தவறு, விளக்கம்
தவறு
8.பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க
1.
வெள்ளிவீதியார் அ.
புறநானூறு
2.
அண்ணாமலையார் ஆ. வாடிவாசல்
3.
சி.சு.செல்லப்பா இ.
குறுந்தொகை
4.
இளம்பெருவழுதி ஈ.
காவடிச்சிந்து
a.
அ,
ஆ,
இ,
ஈ
b.
ஆ,
ஈ,
அ,
இ
c.
இ, ஈ, ஆ, அ
d.
இ,
ஈ,
அ,
ஆ
9. “இனிதென”
– இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக
- உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்; “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
- தனிக்குறில்
முன்ஒற்று உயிர்வரின் இரட்டும; உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
- உயிர்வரின்
உக்குறள் மெய்விட்டோடும்
10. துன்பப்படுபவர் __________
- தீக்காயம்
பட்டவர்
- தீயினால்
சுட்டவர்
- பொருளைக்
காக்காதவர்
- நாவைக் காக்காதவர்
11. பின்வரும் நாலடியரர் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக
மலைமிசைத் தோன்றும்
மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட
குடையர் – நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத்
தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத்
தில்
அ) ஒன்றா
உலகத்து உயர்ந்த
புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று
இல்
ஆ) நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
இ) அளவறிந்து
வாழாதான் வாழ்க்கை
உளபோல
இல்லாகித் தோன்றாக்
கெடும்
12. கீழ்க்காணும் புதுக்கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைத் தேர்ந்தெடுக்க
பூக்களுக்கும்
முட்களுக்கும் இடையில்
புழங்குகிறது யோசனை
பாசத்துக்கும் நியாத்துக்ககும்
நடுவில்
நசுங்குகிறது அறம்
இன்பத்துக்கும் பேராசைக்கும்
நடக்கும்
போராட்டத்தில் வெடிக்கின்றன
வெளியில் குண்டுகளும்
வீட்டில் சண்டைகளும்
ஆசை அறுத்தல்
எளிதல்ல!
முயன்று பார்க்கலாம்
வா!
அ) அருவினை
யென்ப உளவோ
கருவியான்
காலம் அறிந்து
செயின்
ஆ) பீலிபெய்
சாகாடும் அச்சிறும்
அப்பண்டம்
சால மிகுத்துப்
பெயின்
இ) இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
13. ஒப்புரவு என்பதன் பொருள்__________
- அடக்கமுடையது
- பண்புடையது
- ஊருக்கு உதவுவது
- செல்வமுடையது
14.பொருத்துக
அ) வாழ்பவன் 1.காத்திருப்பவன்
ஆ) வாழாதவன் 2.மருந்தாகும் மரமானவன்
இ) தோன்றுபவன் 3.ஒத்ததறிபவன்
ஈ) வெல்ல
நினைப்பவன் 4.புகழ்
தரும்
பண்புடையவன்
உ) பெரும்
பண்புடையவன் 5.இசையொழித்தவன்
6.வீழ்பவன்
விடை : அ – 3. ஆ – 5, இ – 4, ஈ – 1, உ –2
15.விரைந்து கெடுபவன் யார்?
- பிறருடன்
ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
- பிறருடன்
ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்
- பிறருடன்
ஒத்துப் போனவன், தன் வலிமை அறிந்தவன், தன்னை உயர்வாக நினைக்காதவன்
- பிறருடன் ஒத்துப் போகாதவன், தன் வலிமை அறியாதவன், தன்னை உயர்வாக நினைப்பவன்
16.பற்று நீங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்றவனைப் பற்றுவதால் உண்டாவது
- பற்றுகள்
பெருகும் – பொருள்களின் இன்பம் பெருகும்
- பற்றுகள்
அகலும் – பொருள்களின் துன்பம் அகலும்
- பொருள்களின் துன்பம் அகலும் – பற்றுகள் அகலும்
- பொருள்களின்
இன்பம் பெருகும் – பற்றுகள் பெருகும்
17.சொல்லிழுக்குப் படுபவர் _______________
- அடக்கமில்லாதவர்
- தீயினால்
சுட்டவர்
- நாவைக் காக்காதவர்
- பொருளைக்
காக்காதவர்
18.உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு ________
- உரிச்சொற்றொடர், ஈற்றுப்போலி
- வினைத்தொகை,
இடவாகுபெயர்
- வினையெச்சம்,
வினைத்தொகை
- பெயரெச்சம்,
பண்புத்தொகை
19.சரியானவற்றைத் தேர்ந்தெடு
அ) வரை
– மலை ஆ)
வதுவை
– திருமணம்
இ) வாரணம்
– யானை ஈ)
புடவி
– கடல்
- அ, ஆ, இ – சரி; ஈ – தவறு
- ஆ, இ, ஈ – சரி; அ – தவறு
- அ, இ, ஈ – சரி; ஆ – தவறு
- அ, ஆ, ஈ – சரி; இ – தவறு
விடை : அ, ஆ, இ – சரி; ஈ – தவறு
20.கவிதைக்குப் பொருந்தும் திருக்குறளைக் கண்டறிக
கொடி தவித்ததைப் பாரி
அறிந்து கொண்டான்
மயில்
தவித்ததைப் பேகன்
உணர்ந்து கொண்டான்
பிள்ளையின் பரிதவிப்பைத்
தாய்
அறிவாள்
பளிங்கு முகத்தைப் படித்துக்கொள்
அப்படிப் படித்தவர்களைப்
பிடித்துக்கொள்
அ) இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக
தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
ஆ) குறிப்பில் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்
இ) இளைதாக
முள்மரம் கொல்க
களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து
21. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து ………………… நினை
- முகக்குறிப்பை
அறிந்தவரை
- எண்ணியதை
எண்ணியவரை
- மதியால் கெட்டவரை
- சொல்லேர்
உழவை
22.கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.
அ) விரியன் 1)
தண்டை
ஆ) திருகுமுருகு 2)
காலாழி
இ) நாங்கூழ்ப்புழு 3)
சிலம்பு
ஈ) குண்டலப்பூச்சி 4)
பாடகம்
- 3, 4, 2, 1
- 3, 1, 4, 2
- 4, 3, 2, 1
- 4, 1, 3 2
விடை : 3, 1, 4, 2
23.பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று
- சாழல்
- சிற்றில்
- சிறுதேர்
- சிறுபறை
24.“ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல்” ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் ………………………
- மூதூர்
- வெற்றிடம்
- நல்லாடை
- பைந்தளிர்
25.ஜனப் பிரளயம் என்னும் வட மொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
- மக்கள் அலை
- உயிர் அலை
- மக்கள் வெள்ளம்
- மக்கள் அவை
26.அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன் – யார் யாரிடம் கூறியது?
- அமைச்சர்
கவிஞரிடம்
- மன்னன் அமைச்சரிடம்
- அமைச்சர் மன்னனிடம்
- மன்னன் அமுதவல்லியிடம்
27.“அடையாறுப் பாலத்தின் சுவற்றில் எழுதாதீர்கள்” – இவ்வரியில் உள்ள சொற்பிழைகளின் திருத்தும்
- அடையாற்றுப்
பாலத்தின் சுவற்றில்
- அடையாறுப்
பாலத்தின் சுவரில்
- அடையாறுப்
பாலத்தின் சுவற்றில்
- அடையாற்றுப் பாலத்தின் சுவரில்
28.ஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல்லைத் தேர்க
- காவலாளி
- மேலாளர்
- உதவியாள்
- ஆசிரியர்
29.“கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை” – இவ்வடிகளில் பயின்று வருவது ………………….
- அடி எதுகை, அடி மோனை
- சீர் மோனை, அடி எதுகை
- அடி மோனை, அடி இயைபு
- சீர் மோனை, அடி மோனை
30. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குகு
- நான் எழுதுவதோடு
இன்று இலக்கிய மேடைகளிலும் இதழ்களில் பேசுகின்றேன்.
- இன்று நான் இதழ்களில் எழுதுவதோடு இலக்கிய மேடைகளிலும் பேசுகின்றேன்.
- இலக்கிய மேடைகளிலும்
இன்று எழுதுவதோடு நான் இதழ்களில் பேசுகின்றேன்.
- இதழ்களில்
பேசுகின்றேன் நான் இன்று இலக்கிய மேடைகளிலும் எழுதுவதோடு.
Comments
Post a Comment
Your feedback