கடலே!
நீயும் என்னைப் போல காதலில் விழுந்து விட்டாயா?
காடெல்லாம் மேயும் ஆடுகள் போல,
கரையெங்கும் வெள்ளைக் கொக்குகள்
மீன்பிடித்து உண்டு மகிழ்ந்திருக்க,
நீ மட்டும் தூங்காமல்
நள்ளிரவிலும்
புலம்பிக் கொண்டிருக்கிறாயே!
யாரை நினைத்து இந்த வருத்தம்?
யார் அணங்குற்றனை கடலே! பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே?
(குறுந்தொகை)
Comments
Post a Comment
Your feedback