தமிழ் எழுத்துகளில் நாற்பத்தி இரண்டு எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழி என்ற வகையைச் சேர்ந்தவை. அதாவது அந்த ஒற்றை எழுத்தே ஒரு சொல்லாகப் பொருள் தரும்.
ஆ- பசு
ஈ- கொடு
ஊ- இறைச்சி
ஏ -அம்பு
ஐ- அரசன், அழகு, கடவுள்
ஓ-உயர்வு,
கா - சோலை
கூ-கூவு, பூமி, நிலம்
கை-கரம்
கோ- அரசன்
சா- இறப்பு
சீ- இகழ்ச்சிக் குறிப்பு, அடக்கம்
சே-எருது,ஒலிக்குறிப்பு, சிவப்பு
சோ-அரண், உமை, வியப்புச் சொல்
தா -கொடு
தீ -நெருப்பு
து- கெடு
தூ -வெண்மை
தே -தெய்வம்
தை-தை மாதம்
நா-நாக்கு
நீ- நீங்கள்
நே-அன்பு
நை-இகழ்ச்சிக் குறிப்பு
நொ- துன்பம்
நோ- நோவு, நோய்
பா- பாட்டு
பூ- மலர்
பே- நுரை, அழகு
பை- அழகு, சாக்கு
போ- செல்
மா (விலங்கு, பெரியது)
மீ -உயரம்
மு -மூப்பு
மே -மேன்மை
மை- அஞ்சனம், கருநிறம்
மோ -முகர்தல்
யா-மரம்
வா-வரச்சொல்லுதல்
வீ - பூவின் ஒரு பருவம்
வை - வையகம், இங்கு வை எனல்
வௌ-கௌவிக்கொள்
Comments
Post a Comment
Your feedback