பாரதியாரின் மிக அற்புதமான படைப்பான ஞான ரதத்தில் மண்ணுலகக் காட்சியில் சென்னை ஜன சங்கத்தைப் பற்றி நையாண்டியாக எழுதியுள்ளார்.
திருவல்லிக்கேணியிலே 'செ....ஸங்கம்' என்பதாக ஒரு தேச பக்த சபை உண்டு. அதில் தேசபக்தர்கள் தான் கிடையாது. நானும் சிற்சில ஐயங்கார்களுமே சேர்ந்து காரியங்கள்- ஒரு காரியமும் நடக்கவில்லை-நடத்தினோம்.
நாங்கள் தேசபக்தர்கள் இல்லை என்று அந்த சபை ஒன்றும் இல்லாமல் போனதில் இருந்தே நன்கு விளங்கும்.
நான் சோம்பலுக்குத் தொண்டன்.
எனது நண்பர்கள் எல்லாம் புளிச்சோத்துக்குத் தொண்டர்கள்.
சிலர் மட்டிலும் பணத் தொண்டர்.
ஆனால் எங்களில் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டால் கை கால்கள் நடுங்கும்படியாக இருக்கும்.
பணத் தொண்டரடிப்பொடியாழ்வார் எங்கள் எல்லோரையும் காட்டிலும் வாய்ப்பேச்சு வீணர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலாம் என்பான். மற்றொருவன் மணலைக் கயிறாகத் திரிக்கலாம் என்பான்.
ஒருவன் "நாம் இந்த ரோட்டில் இந்த விதமாகவே வேலை செய்துகொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறு மாதத்தில் காற்றாகிப் போய்விடும் என்றான்.
மற்றொருவன் "ஷ்யாம் ஸ்ரீகிருஷ்ண வர்மா ஸ்வராஜ்யம் கிடைக்க பத்து வருஷம் ஆகும் என்று கணக்குப் போட்டிருக்கிறார். ஆறு வருஷத்தில் கிடைத்துவிடும்" என்று எனக்குத் தோன்றுகிறது என்பான்.
தவளை உருவம் கொண்ட மூன்றாம் ஒருவன் ஆறு மாதம் என்று சொல்லடா என்று திருத்திக் கொடுப்பான்.
Comments
Post a Comment
Your feedback