கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை
இருபொருள்
வேற்றுமைப் படவரின் வேற்றுமை அணியே
என்பது
வேற்றுமை அணிக்குத் தண்டியலங்காரம் கூறும் இலக்கணம் ஆகும்.
செய்யுளில்
இரு பொருள்களுக்குரிய ஒற்றுமைகளை
முதலில் கூறி,
பின்னர்
பிறிதொரு காரணத்தால் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டதெனக்
காட்டுவது வேற்றுமை அணி எனப்படும்.
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்
இந்தத்
தண்டியலங்கார உரை மேற்கோள் பாடலில் கதிரவனுக்கும்
தமிழுக்கும்
இடையே உள்ள பயன் சார்ந்த
ஒற்றுமை கூறப்பட்டுள்ளது.
இரண்டு
ஒப்புமை உடைய பொருட்களாக கதிரவனும் தமிழும்
இந்தப்
பாடலில் சொல்லப்பட்டுள்ளது.
முதலாவதாக,
இரண்டும்
மலையில் தோன்றுவது.
கதிரவன்
உயர்ந்த மலைகளுக்கு இடையே
இருந்து
தோன்றுகிறது.
தமிழ் பொதிகை
மலையிலிருந்து தோன்றியது.
ஆக இரண்டும் தோன்றுமிடம்
ஒன்று.
இரண்டாவதாக,
உயர்ந்தோர் தொழும் பண்பு இரண்டிற்கும் உண்டு.
கதிரவனை வணங்குதல் இன்றும் நடைபெறுகிறது.
தமிழை வணங்கி, வாழ்த்தித் தான் எந்த செயலையும் செய்கிறோம்.
ஆதலால் இரண்டும் தொழப்படும் உயரிய பண்பு கொண்டவை.
மூன்றாவதாக,
கதிரவன் தனது ஒளியால் ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட இந்த உலகின்
புற இருளை
நீக்குகிறது.
தமிழ்மொழி தமது சிறந்த படைப்புகளால் மக்களின் அறியாமை என்னும் இருளை நீக்கி வருகிறது.
கதிரவனும்
இருளை அகற்றுகிறது.
தமிழும்
அறியாமை என்னும் இருளை அகற்றுகிறது.
இரண்டிற்குமான வேற்றுமை என்ன ?
கதிரவனுக்கு நிகர் உண்டு.
அண்டத்துள் உள்ள பல சூரியன்களுள் ஒன்று தான் இந்தக் கதிரவன்.
ஆனால் தமிழுக்கு நிகரான மொழி இல்லை.
ஒப்பு உவமை கூற முடியாத
இணையற்ற மொழி தமிழ் மொழி.
அதனால்தான் அது தன்னேரில்லாத தமிழ் என்று சொல்லப்பட்டுள்ளது.
இரண்டுக்கும் இத்தனை ஒற்றுமை இருப்பினும்
இவற்றுள் தமிழ் தன்னிகரில்லாதது என்று வேறுபடுத்திக்
காட்டப்பட்டுள்ளதால் இது வேற்றுமையணி ஆயிற்று.
வேற்றுமை
அணிக்கு எடுத்துக்காட்டாக
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால்
சுட்ட வடு "
தீயினால் சுட்டபுண் உடம்பில் தோன்றினாலும் உள்ளே ஆறிவிடும்.
ஆனால் நாவினால் பேசிய தீய சொற்கள் ஒருவர் உள்ளத்தைச் சுட்டு
வடுவாகி நிரந்தரமாக இருக்கும் என்பது
இப்பாடலின்
பொருள்.
தீ சுடும். நாவும் சுடும்.
அதனால் தீ, நாவு இரண்டிற்கும்
சுடுகின்ற குணம் ஒற்றுமை .
ஆனால் இவை
இரண்டிற்கும் இடையே
ஒரு
வேற்றுமையும் உண்டு.
தீயினால்
சுட்டபுண் ஆறிவிடும்.
ஆனால் நாவினால் சுட்டபுண் என்றும் ஆறாது.
இது
வேற்றுமை.
ஆதலால் இது
வேற்றுமை அணி.
Comments
Post a Comment
Your feedback