தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகும் சமயம் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும்படி தூண்ட எண்ணிய தோழி, “நிலவே, நீ இரவில் நெடுநேரம் வந்து ஒளி தருவது அவர்களின் களவொழுக்கத்திற்கு நன்மை செய்யவில்லை"
என்று கூறுகிறாள்.
கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்
இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.
(நெடுவெண்ணிலவினார்)
பாடலின் பொருள்:
நீண்ட நேரம் காயும் வெண்ணிலவே! கரிய அடியடைய வேங்கை மரத்தின் மலர்கள் குண்டுக்கல் மேல் உதிர்ந்து கிடப்பது அந்தக் காட்டில் திரியும் பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும். அந்தக் காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை.
இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே
இருளே இவளின் துணையே
தினம் தித்திக்கும் ராத்திரிகள்
நிலவே சுடாதே
அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே...
சொற்பொருள்:
கருங்கால் -கரிய அடிமரம்
வேங்கை -வேங்கை மரம்
வீ - பூ
உகுதல் -உதிர்தல்
துறுகல் =குண்டுக்கல்
இரு = பெரிய
குருளை - குட்டி
எல் -இரவு
Comments
Post a Comment
Your feedback