சும்மா இருப்பது தான் சுகம்.
சும்மா இருப்பது என்றால் வெட்டியாக இருப்பதல்ல.
ஞானம் அடைந்தவர்களுக்கு கர்மம் தேவை இல்லை
என்கிறது கீதை.
அதனால் தான் சும்மா இருக்கும் அந்த சுகம் என்று
வரும் என்று ஏங்குகிறார் வள்ளலார்.
பாடல்:
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு
மோஅறியேன் எங்கோவே-துன்றுமல
வெம்மாயை
யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா
இருக்கும் சுகம்.
(திரு அருட்பா)
சீர் பிரித்த பின் :
இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் என் கோவே - துன்று மல
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம் .
பொருள் :
இன்று வருமோ - இன்று வருமோ
நாளைக்கே வருமோ - நாளைக்கே வருமோ
அல்லது - அல்லது
மற்று என்று வருமோ அறியேன் - அது என்று
வருமோ, நான் அறியேன்
என் கோவே - என் தலைவனே
துன்று மல வெம் மாயை அற்று- காலம்
காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி
வெளிக்குள் வெளி கடந்து – விட்டுவிடுதலையாகி
சும்மா இருக்கும் சுகம் - சும்மா இருக்கும்
சுகம்
எதற்கும் ஆசைப் படாமல், இருப்பது போதும் என்ற திருப்தியுடன், சும்மா இருக்க முடிந்தால் தானே ‘சும்மா இருக்கும் சுகம்’ .
அந்த சுகம் நமக்கெல்லாம் "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்" கதை
தான்.
Comments
Post a Comment
Your feedback