நவம்பர் 9: 1236
டில்லி சுல்தான் இல்டுமிஷ் இறந்த பின் அவர் மகன் ருக்நுதின் பிரோஷ் பட்டத்திற்கு வந்தான்.
அவனது தீய பழக்கவழக்கங்களுக்காக ஆட்சியிலிருந்து
விரட்டப்பட்டான். அவனும் அவன் தாயாரும் குற்றவாளிகள்
எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இன்று கொல்லப்பட்டனர்.
நவம்பர் 9: 1847
எடின்பர்க்கில் முதன் முதலாக ஒரு பெண்ணிற்கு மயக்க மருந்து
(குளோரோபார்ம்) கொடுத்து பிரசவம் பார்க்கப்பட்டது.
நவம்பர் 9: 1937
கவிஞர் அப்துல் ரகுமான் பிறந்த நாள்.
நவம்பர் 9: 1959
‘வீணை காயத்ரி’ யின் பிறந்த நாள்.
நவம்பர் 9: 1960
இந்திய விமானப்படையின் முதல் தலைமைத் தளபதி ஏர்-மார்ஷல்
சுப்ரொடோ முகர்ஜி டோக்கியோவில் திடீரெனக் காலமானார்.
நவம்பர் 9: 1987
பிரபல திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீநிவாசன் காலமானார்.
நவம்பர் 9: 1998
நடிகர் பி. எஸ். வீரப்பா மறைந்த நாள். வில்லன் என்றாலே ஒரு அகம்பாவமான சிரிப்பு என்பதற்கு அடையாளமாக இருந்தது இவருடைய வில்லத்தனமான சிரிப்பு.
எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback