நவம்பர் 21: 1947
‘ஜெய் ஹிந்த்’ என்ற வாசகம் பொறித்த சுதந்தர இந்தியாவின் முதல் ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது. மூணரை அணா மதிப்புடையது இது.
நவம்பர் 21: 1970
‘ராமன் விளைவு’ கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் பெங்களுரில் காலமானார்.
நவம்பர் 21: 1991
காந்தியவாதியும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவருமான தமிழக முன்னாள் கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கம் செட்டியார் காலமானார்.
நவம்பர் 21: 1994
சிறந்த கல்வியாளரும் பொருளியலாளருமான மால்கம்.எஸ். ஆதிக்ஷேஷய்யா காலமானார்.
நவம்பர் 21: 2022
தமிழறிஞர் ஔவை து. நடராசன் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback