நவம்பர் 1: 1848
முதல் ரயில் நிலைய புத்தகக் கடை W.H.ஸ்மித் புக் ஸ்டால் லண்டன் ஹூஸ்டன் ரயில் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.
நவம்பர் 1: 1849
இந்தியாவில் பதிவுத் தபால் முறை முதன் முதலில் பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. எல்லாவிதக் கடிதங்களுக்கும் அப்போதைய பதிவுத் தபால் கட்டணம் எட்டணா (50 பைசா).
நவம்பர் 1: 1858
கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து இந்தியாவின் நிர்வாகப் பொறுப்பை இன்றுமுதல் பிரிட்டிஷ் அரசே ஏற்றுக்கொண்டுவிட்டதாக விக்டோரியா மகாராணி பிரகடனம் செய்தார்.
நவம்பர் 1: 1867
பெங்களுரில் வானிலை ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்பட்டது.
நவம்பர் 1: 1848
பெண்கள் சைக்கிள் பந்தயம் முதன் முதலாக பிரான்சில் நடந்தது.
நவம்பர் 1: 1879
எடிசன் மின் விளக்குக்கான காப்புரிமையைப் பெற்றார்.
நவம்பர் 1: 1881
இன்று கல்கத்தா டிராம்வேஸ் கம்பெனியாரால் குதிரையால் இழுக்கப்படும் முதல் ட்ராம் கார் இயக்கப்பட்டது.
நவம்பர் 1: 1950
சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலையில் முதல் நீராவி எஞ்சின் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது.
நவம்பர் 1,1954
நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் புதுச்சேரி ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தில் தான் இருந்தது.
நவம்பர் 1,1954 அதாவது இன்று தான் புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
நவம்பர் 1: 1956
மொழிவாரி மாநிலமாக தமிழ்நாடு உருப்பெற்ற நாள்.
1956-ம் ஆண்டுவரை ஒன்றுபட்டிருந்த மதராஸ் மாகாணம் இன்று ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.
அந்தந்த மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகள் அந்தந்த மாநிலங்களோடு இணைக்கப்பட்டன.
சுதந்திர இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா பிரிந்தபோது, தமிழகத்துக்குச் சொந்தமான 32,000 ச.கி.மீ பரப்பளவிலான பகுதிகள் ஆந்திரா வசம் சென்றன.
`மதராஸ் மனதே’
என்று சென்னையை ஆந்திராவின் தலைநகராக்க வேண்டும் எனக் கூறி அந்த மாநிலத்தினர் போராட்டம் நடத்தினர். அதை எதிர்த்து, ம.பொ.சி-யின் தமிழரசுக் கழகம், `தலையைக்
கொடுத்தேனும்
தலைநகரை
மீட்போம்’
எனக் கூறி வடக்கெல்லை போராட்டத்தைத் தொடங்கியது.
இறுதியில், சென்னை, திருத்தணி ஆகிய தாயகப் பகுதிகளை தமிழ் மாநிலம் தக்கவைத்துக்கொண்டது. ஆனால், சித்தூர், திருப்பதி, காஹஸ்தி போன்ற தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த நிலப்பகுதிகள் ஆந்திராவிடம் பறிபோயின. குறிப்பாக, சித்தூர் மாவட்டத்தில் 19,000 ச.கி.மீ நிலப்பரப்பும், நெல்லூர் மாவட்டத்தில் 13,000 ச.கி.மீ. நிலபரப்பும் சேர்த்து மொத்தமாக 32,000 ச.கி.மீ பரப்பளவிலான பகுதிகளை தமிழ்நாடு, ஆந்திராவிடம் இழந்தது.
தமிழகத்துக்குச் சேரவேண்டிய கொள்ளேகால், மாண்டியா, கொல்லங்கோடு வனப்பகுதி, பெங்களூர் தண்டுப்பகுதி முதலான பகுதிகளை கர்நாடகா மாநிலத்திடம் தமிழ்நாடு இழந்தது.
இதேபோல் கேரளாவிலும், தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை வனப்பகுதி, பாலக்காடு வனப்பகுதி, நெடுமாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளை தமிழ்நாடு இழந்து நிற்கிறது.
இன்னும் பல பகுதிகளை இழந்திருக்கவேண்டிய தமிழ்நாடு, மார்ஷல் நேசமணி, பி.எஸ்.மணி போன்ற தமிழகத் தலைவர்களின் தெற்கெல்லைப் போராட்டத்தால் தற்காத்துக்கொள்ளப்பட்டது.
இந்த எல்லைப்போராட்டத்தால் 36 தமிழர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கின்றனர்.
திருவிதாங்கூர் அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
நவம்பர் 1: 1956
டில்லி யூனியன் பிரதேசமாகவும் மத்தியப்பிரதேசம் மாநிலமாகவும் இன்று அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 1, 1959
புகழ் பெற்ற நடிகராக பாடகராக விளங்கிய தியாகராஜ பாகவதர் மறைந்த நாள்.
நவம்பர் 1: 1967
அகில இந்திய வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.
நவம்பர் 1: 1973
லட்சத் தீவு, மினிகாய், அமீன் தீவு ஆகியவை ஒன்றாகச் சேர்க்கப்பட்டு ‘லட்சத்தீவுகள்’ என்ற பெயரில் யூனியன் பிரதேசமானது. இதன் பரப்பு 32 ச.கி.மீ.
நவம்பர் 1: 1973
மைசூர் மாநிலத்தின் பெயர் கர்நாடகா என மாற்றப்பட்டது.
நவம்பர் 1: 1984
அக்டோபர் 31 ஆன நேற்று இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பலர் பலியானார்கள்.
நவம்பர் 1, 2006
இதுவரை பெங்களூர் என வழங்கிவந்த கர்நாடக மாநிலத் தலைநகரின் பெயர் பெங்களூரு என இன்று மாற்றப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback