நவம்பர் 10:1899
கி.ஆ.பெ. விசுவநாதம்பிள்ளை பிறந்த நாள்.
இவருடைய வேண்டுகோளை ஏற்றுத்தான் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., தஞ்சையில் தமிழுக்கென்று தனியாக ஒரு பல்கலைக்கழகத்தை அமைத்தார். அது தான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்.
நவம்பர் 10:1910
கொத்தமங்கலம் சுப்பு பிறந்த நாள்.
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் காலம் கடந்து இன்றும் பேசப்பட்டும் ஒரு திரைப்படம்.
கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற நாவல் தான் தில்லானா மோகனாம்பாள் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர், பத்திரிக்கையாளர், நாடகநடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர் இவர்.
15 பிப்ரவரி 1974 இவர் மறைந்த நாள்.
நவம்பர் 10:1910
பிரபல வரலாற்று நாவலாசிரியர் சாண்டில்யன் பிறந்த நாள்.
நவம்பர் 10:1916
தமிழ்ப் பேராசிரியர் மற்றும் தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் பிறந்த நாள்.
புகழ் பெற்ற எழுத்தாளரும் கல்கண்டு பத்திரிகையின் ஆசிரியருமான தமிழ்வாணன் காலமானார்.
நவம்பர் 10: 1990
இந்திய பிரதமராக சந்திரசேகரும் துணைப் பிரதமராக தேவிலாலும் பதவியேற்றனர். இன்று பதவியேற்ற அந்த அரசு 21.6.1991 ல் கவிழ்ந்தது.
நவம்பர் 10: 2019
பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்று நினைத்துக்கொண்டிருந்த தேர்தல் கமிஷன் எவ்வளவு அதிகாரங்கள் கொண்டது என்று காட்டிய நேர்மையும் தீரமும் கொண்ட தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் மறைந்த நாள்.
திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் என்பது அவரது பெயரின் விரிவாக்கம்.
1991 முதல் 1996 வரை அவர் தேர்தல் கமிஷனராக இருந்த காலத்தில் தில்லுமுல்லு அரசியல்வாதிகளை அலறவைத்தவர் அவர்.

Comments
Post a Comment
Your feedback