நவம்பர் 22 : 1497
இந்தியாவிற்கு கடல்வழி காணப்புறப்பட்ட வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையை அடைந்தார்.
நவம்பர் 22 : 1774
இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட வழி வகுத்த ராபர்ட் கிளைவ் தற்கொலை செய்து கொண்டார்.
நவம்பர் 22 : 1938
வரலாற்றுக் காலத்துக்கு முன்பு வாழ்ந்து அழிந்து போய்விட்டதாகக் கருதப்பட்ட கொய்லகாந்த் என்னும் மீன் தென்னாப்பிரிக்கக் கடற்பகுதியில் உயிரோடு பிடிக்கப்பட்டது.
நவம்பர் 22 : 1967
தமிழறிஞர்அ.சிதம்பரநாதன் செட்டியார் காலமானார்.
நவம்பர் 22 : 1972
சித்தாந்த சைவமணி என்று புகழ்பெற்ற டி.எஸ்.மீனாட்சி சுந்தரம்பிள்ளை காலமானார்.
நவம்பர் 22 : 2016
சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணா மறைந்த நாள். திருவிளையாடல் படத்தில் வரும் புகழ்பெற்ற பாடலான 'ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா' , கவிக்குயில் படத்தில் வரும் ' சின்னக் கண்ணன் அழைக்கிறான்' உட்பட பல திரைப்படப் பாடல்கள் இவர் பாடியவை. புல்லாங்குழல், வீணை, மிருதங்கம் என பல வாத்தியங்களை இசைக்கும் திறன் கொண்டவராக விளங்கியவர் அவர். தனது வாழ்நாளில் ஏறத்தாழ 25,000 கச்சேரிகளை உலகம் முழுவதும் நிகழ்த்தி பெரும் சாதனை புரிந்தவர் அவர்.

Comments
Post a Comment
Your feedback