நவம்பர் 7: 1862
பிரிட்டிஷாரால் நாடு கடத்தப்பட்ட கடைசி மொகலாய மன்னன் இரண்டாம் பகதூர்ஷா ரங்கூனில் காலமானார். இன்றே அடக்கம் செய்யப்பட்டது அவர் உடல்.
நவம்பர் 7: 1888
பிலடெல்பியாவில் ஜான் கார்பட் என்பவர் செலுலாய்ட் புகைப்பட பிலிம் கண்டுபிடித்ததாக அறிவித்தார்.
நவம்பர் 7: 1888
சர்.சி.வி. ராமன் பிறந்த நாள்.
நவம்பர் 7: 1922
குழந்தை இலக்கியம் என்றாலே நினைவுக்கு வரும் பெயர் அழ.வள்ளியப்பா. அவர் அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி ஆகியோருக்கு மகனாக இன்று தான் பிறந்தார்.
மார்ச் 16, 1989 இவர் மறைந்த நாள்.
நவம்பர் 7: 1993
உலகெங்கும் இந்து சமயத்தையும் தமிழையும் பரப்பி வந்த திருமுருக கிருபானந்த வாரியார் லண்டனிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை விமானத்தில் வந்தபோது சென்னையில் தரையிறங்குவதற்கு அரைமணி நேரத்துக்கு முன் விமானத்திலேயே காலமானார்.

Comments
Post a Comment
Your feedback