நவம்பர் 3: 1935
பிரபல பின்னணிப் பாடகி ஜிக்கியின் பிறந்த நாள்.
மயக்கும் மாலைப் பொழுதே நீ வாராய்...
காலத்தால் அழியாத ஒரு பாடல். A.M. ராஜா, ஜிக்கி குரல்களில் வரும் அந்தப் பாடல் ஒரு எவர் கிரீன் பாடல். அந்தப் பாடலைப் பாடிய A.M. ராஜா தான் ஜிக்கியின் கணவர். காதல் என்றாலும் இரு வீட்டு சம்மதத்தின் பேரில் நடந்த திருமணம் அவர்களுடையது.
நவம்பர் 3: 1957
இன்று முதன்முதலாக விண்வெளிக்கு முதல் உயிரினமாக ஸ்புட்னிக் -2 என்ற ரஷ்ய சாட்டிலைட் மூலம் லைக்கா என்ற நாய் அனுப்பிவைக்கப்பட்டது.
திரும்பி வர எந்த ஏற்பாடும் செய்யப்படாததால் லைக்கா பூமிக்கு மீண்டும் வர வழியில்லாமல் சில நாட்கள் கழித்து இறந்து விட்டது. அந்த சாட்டிலைட் 162 நாட்கள் சுற்றுப்பாதையில் இயங்கிக் கொண்டிருந்தது.
நவம்பர் 3: 1961
ஐ.என்.எஸ்.விக்ராந்தி என்னும் நம் நாட்டின் முதல் விமானம் தாங்கிக் கப்பல் கடற்படையில் சேர்ந்து செயல்படத் தொடங்கியது.
நவம்பர் 3: 1986
மூத்த தமிழ் எழுத்தாளர் சோம.லெ (சோம.லெட்சுமணன் செட்டியார்) காலமானார்.
நவம்பர் 3: 1996
கபில்தேவ் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார்.

Comments
Post a Comment
Your feedback