நவம்பர் 19: 1850
பிலடெல்பியாவைச் சேர்ந்த பிரடெரிக் லாங் கென்ஹயிம் போட்டோ ஸ்லைடுக்கான (Photo slide) காப்புரிமம் பெற்றார்.
நவம்பர் 19: 1883
திறந்த ஊது உலையையும் புதிய முறையில் மின் முலாம் பூசுவதையும் கண்டுபிடித்த வில்லியம் ஸீமன்ஸ் காலமானார்.
நவம்பர் 19: 1887
நியூயார்க் நகரில் சுதந்தர தேவியின் சிலைபீடத்தில் பொறிக்கப்பட்ட பாடலை எழுதிய அமெரிக்கப் பெண் கவிஞர் ரம்பா லாசரஸ் காலமானார்.
நவம்பர் 19: 1905
லார்டு மிண்டோ இந்தியாவின் கவர்னர் ஜெனெரலாகவும் வைஸ்ராயாகவும் பதவியேற்றார்.
நவம்பர் 19: 1917
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள்.
நவம்பர் 19: 1982
சிறந்த வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் புகழ் பெற்ற நடிகர் அசோகன் காலமானார்.
நவம்பர் 19: 2008
புகழ்பெற்ற வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் மறைந்த நாள். படத்தில் வில்லனாக நடித்த போதும் உண்மையில் தனிமனித ஒழுக்கத்தில், பக்தியில் அப்பழுக்கற்ற புகழுக்குச் சொந்தக்காரர்.

Comments
Post a Comment
Your feedback