நவம்பர் 11: 1851
முதன் முதலாக லிவர்பூலிலிருந்து மான்செஸ்டருக்கு ரயில் மூலம் தபால் அனுப்பப்பட்டது.
நவம்பர் 11: 1851
அமெரிக்காவில் டெலஸ்கோப்பிற்கு காப்புரிமம் பதிவு செய்யப்பட்டது.
நவம்பர் 11: 1888
மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாள்.
நம் பாரத நாடு விடுதலையடைந்த பின் அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர் இவர்.
பழம்பெரும் நடிகை டி. பி. ராஜலட்சுமி பிறந்த நாள்.
இவர் தான் தமிழ்த் திரைப்படத்தில் நடித்த முதல் பெண் நடிகை.
தமிழில் வெளிவந்த, முதல் பேசும் படமான காளிதாஸ் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்தப்படம் 1931 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
நவம்பர் 11: 1917
ரஷ்யாவில் 8மணி நேர வேலை முறை அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 11: 1918
முதல் உலகப் போர் இன்றுடன் முடிந்தது. பாரிஸ் நகருக்கு வடக்கே காம்பெயின் காட்டில் ரெத்தோண்டஸ் ரயில் நிலையத்தில் ஒரு ரயில் பெட்டியில் காலை 5 மணிக்கு போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்தானது. கையெழுத்தான 6 மணி நேரத்துக்குள் அதாவது பதினோராவது மாதம் 11 ஆம் நாள் காலை 11 மணிக்கு அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் ஏற்பட்டது. 1567 நாள்கள் நடந்த முதல் உலகப் போர் முடிந்தது.
இப்போரில், ஒரு கோடிப் பேர் இறந்தனர். 2 கோடிக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது தவிர பட்டினியால் 50 இலட்சம் பேர் இறந்தனர்.
நவம்பர் 11: 1925
காஸ்மிக் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க இயற்பியல் விஞ்ஞானி ஏ.மில்லிகன் அறிவித்தார்.
நவம்பர் 11: 1952
கலிபோர்னியாவின் ஜான் முல்லின் இவெயினி ஜான்சன் ஆகிய இருவரும் ‘வீடியோ ரெக்கார்டர்’செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்.
நவம்பர் 11: 1907
விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பமானது.
நவம்பர் 11: 1975
இந்தியாவின் முதல் நடமாடும் தபால் அலுவலகம் பூனாவில் ஆரம்பிக்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback