நவம்பர் 20: 1666
ஆக்ரா சிறையிலிருந்து பழக்கூடை மூலம் தப்பி வந்த சிவாஜி இன்று ரெய்கார் வந்து சேர்ந்தார்.
நவம்பர் 20: 1906
ரோல்ஸ் என்பவரும் ராய்ஸ் என்பவரும் சேர்ந்து ரோல்ஸ்சாய்ஸ் கம்பெனியை நிறுவினார்கள்.
நவம்பர் 20: 1917
ஜகதீஷ் சந்திர போஸ், கல்கத்தாவில் போஸ் ஆய்வு மையத்தைத் துவக்கினார்.
நவம்பர் 20: 1918
பாரதியார் புதுவை எல்லையைக் கடந்து கடலூருக்குள் நுழையும் போது பிரிட்டிஷ் போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 20: 1936
பி.பி.சி தொலைக்காட்சியில் முதன் முதலில் மகளிர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
நவம்பர் 20: 1950
இசையமைப்பாளரும் கானா பாடல்களில் புகழ்பெற்றவருமான தேவா பிறந்த நாள்.
நவம்பர் 20: 1963
காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார்.
நவம்பர் 20: 2022
பாசமலர், படித்தால் மட்டும் போதுமா உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய தமிழ்த் திரைப்பட கதை, திரைக்கதை, வசன கர்த்தா ஆரூர் தாஸ் மறைந்த நாள்.
பெரும்பாலான எம். ஜி. ஆர் படங்களுக்கும் சிவாஜி கணேசன் படங்களுக்கும் இவர் தான் வசனம் எழுதியிருப்பார்.


Comments
Post a Comment
Your feedback