நவம்பர் 23 :1552
பெண்கள் தங்கிப் படிப்பதற்கான பள்ளிக்கூடம் முதன் முதலாக லண்டனில் கிரைஸ்ட் மருத்துவமனையில் துவக்கப்பட்டது.
நவம்பர் 23 :1616
Globe (க்ளொப்) என்னும் உலக உருண்டையை வடிவமைத்த ரிச்சர்ட் ஹக்குல்யட் காலமானார்.
நவம்பர் 23 :1921
கவிஞர் சுரதா பிறந்த நாள்.
இராசகோபாலன் என்ற தன் பெயரை சுப்பு ரத்தின தாசன் என்று மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா. சுப்புரத்தினம் என்பது கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர். உவமைக் கவிஞர் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் இவர்.
20 ஜூன் 2006) இவர் மறைந்த நாள்.
நவம்பர் 23 :1926
சத்ய சாய் பாபா பிறந்த நாள்.
ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி கிராமத்தில் பிறந்த சத்தியநாராயண ராயூ தான் பின்னாளில் சத்ய சாய் பாபா என்ற பெயரில் ஆன்மிகவாதியாகவும் அவதாரமாகவும் கருதப்பட்டார்.
அவரது பெற்றோர் மீசரகண்ட ஈஸ்வரம்மா மற்றும் ரத்னாகரம் பெத்தவெங்கட் ராயூ தம்பதியர். ஆன்மிகத்தோடு தன்னுடைய அறக்கட்டளை மூலம் அறப்பணியும் செய்துவந்த இவர் 24 ஏப்ரல் 2011 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
நவம்பர் 23 :1937
புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸ் காலமானார்.
நவம்பர் 23 :1952
கொடைக்கானலில் முதன் முதலாக ரேடியோ டெலஸ்கோப் நிறுவப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback