நவம்பர் 8: 1674
உலகப் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் லண்டனில் காலமானார்.
நவம்பர் 8: 1680
இத்தாலிய நாட்டு மத போதகரும் தேம்பாவணி நூலை எழுதியவருமான வீரமாமுனிவர் (Constantine
Joseph Beschi) பிறந்த நாள்.
கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் பொருட்டு, 1710ம் ஆண்டில் தமிழகத்துக்கு வந்தார்.
தமிழின் மீது இருந்த பற்றால் தனது பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார்.
எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். திருக்குறளை லத்தீனுக்கு மொழி பெயர்த்தார்.
நவம்பர் 8: 1944
தமிழ் நாட்டையே உலுக்கிய ஒரு வழக்கு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.
‘இந்து நேசன்’ பத்திரிக்கையின் ஆசிரியர் லட்சுமிகாந்தன் வேப்பேரியில் ஒரு ரிக்ஷாவில் போய்க் கொண்டிருந்தபோது இன்று கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் கைது செய்யப்பட்டது தான் இந்த வழக்கு பிரபலமாகக் காரணம்.
மறுவிசாரணையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
நவம்பர் 8: 1967
பிரிட்டனின் முதல் உள்ளுர் வானொலி நிலையமான ‘ரேடியோ லெய் செஸ்டர்’ ஒலிபரப்பைத் துவக்கியது.
நவம்பர் 8: 1977
புகழ் பெற்ற இயக்குநரும் வாகினி ஸ்டுடியோவை நிறுவியவருமான பி.என்.ரெட்டி காலமானார்.

Comments
Post a Comment
Your feedback