நவம்பர் 18: 1477
வில்லியம் காக்ஸ்டனின் ‘த டிக்டஸ் அண்ட் சேயிங்ஸ் ஆப் தி பிலாசபர்ஸ்’(Dictes and Sayings of the Philosophers) என்ற நூல் வெளியானது. பிரிட்டனில் அச்சான முதல் நூல் இது.
நவம்பர் 18: 1626
ரோம் நகரில் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
நவம்பர் 18: 1727
அம்பர் மகாராஜா இரண்டாம் ஜெய்சிங்கினால் ஜெய்ப்பூர் நகர் நிர்மாணிக்கப்பட்டது.
நவம்பர் 18: 1870
ஹோமரின் ‘ஒடிசி’யில் வருணிக்கப்பட்ட டிராய் நகரை கிரீசில் இதாகா என்னுமிடத்தில் ஹென்ரிக் ஹிலிமான் என்பவர் அகழாய்வின் மூலம் கண்டு பிடித்தார்.
நவம்பர் 18: 1928
அமெரிக்காவில் மிக்கி மவுசை மையமாகக் கொண்டு ‘ஸ்டீம் போட் வில்லி’ என்னும் முதல் கார்டூன் படம் பேசும் படமாகத் திரையிடப்பட்டது.
நவம்பர் 18: 1936
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அறியப்படுகிற வ.உ.சிதம்பரம்பிள்ளை மறைந்த நாள்.
நவம்பர் 18: 1962
அணுக்கொள்கைக்கு அடிப்படை அமைத்தவரும் 1922 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஹென்றி டேவிட் நீல்ஸ் போர் காலமானார்.
நவம்பர் 18: 1972
புலி நமது நாட்டின் தேசிய விலங்கானது.
நவம்பர் 18: 1973
‘அச்சமே நோய், அச்சம் தவிர்த்தால் நோய் போய்விடும்’ என்று அருளிய புதுவை அரவிந்தர் ஆசிரம அன்னை மறைந்தார்.
நவம்பர் 18: 1983
சிறந்த இலக்கிய மேதையும் கதாசிரியருமான தி.ஜானகிராமன் காலமானார்.
நவம்பர் 18: 1995
சென்னையில் கலாக்ஷேத்ராவை உருவாக்கியவர்களுள் ஒருவரான சே.சங்கரமேனன் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback