நவம்பர் 17 :1883
ஓட்டப்பந்தயத்தில் தொடர் ஓட்ட முறை கலிபோர்னியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நவம்பர் 17 :1920
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன் பிறந்த நாள்.
நவம்பர் 17 :1927
செக்கோஸ்லேவாகியா நாட்டில் பிறந்து தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழுக்குச் சிறந்த தொண்டு செய்த மொழியியல் வல்லுநர் கமில் சுவலபில் (Kamil Vaclav Zvelebil, ) பிறந்த நாள்.
தமிழ்க்கடவுளான முருகனிடத்து மிகுந்த ஈடுபாடும் பக்தியும் கொண்டவர் இவர்.
ஜனவரி 17, 2009 இவர் மறைந்த நாள்.
லாகூரில் சைமன் கமிஷன் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஊர்வலத்தை அக்டோபர் 30 ஆம் தேதி தலைமை தாங்கி நடத்திச் சென்ற பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் மீது போலிஸார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியதால் இன்று அவர் மரணமடைந்தார்.
நவம்பர் 17 :1940
இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சர்தார் வல்லபாய் படேல் கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 17 :1970
ரஷ்யாவின் லூனா 17 ராக்கெட்டிலிருந்து லூனாக் கோட் 1 என்னும் ரோவர் நிலவில் இன்று தரையிறங்கியது.
நவம்பர் 17 :1989
பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் மறைந்த நாள்.
இவர் பாடிய முதல் திரைப்பட பாடலான ' வாராய் நீ வாராய் .. நீ போகுமிடம் வெகு தூரமில்லை ' பாடல் இவரைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. எம். ஜி. ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் வரும் இந்தப் பாடலை ராமநாதன் இசையமைப்பில் எம் . ஜி. யாருக்காக ஜிக்கியோடு இணைந்து திருச்சி லோகநாதன் பாடினார்.
நவம்பர் 17 : 2015
பக்திப்பாடல்களும் பஜனையும் தான் வாழ்க்கை என்று வாழ்ந்து புகழ்பெற்ற பித்துக்குளி முருகதாஸ் மறைந்த நாள்.
25 ஜனவரி 1920 - அன்று பிறந்த இவர் தொண்ணூற்றுஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.

Comments
Post a Comment
Your feedback