7 டிசம்பர் 1782:
தென்னிந்திய வரலாற்றில் புகழ்பெற்ற முஸ்லிம் மன்னரான ஹைதர் அலி காலமானார்.
7 டிசம்பர் 1792:
இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியாரால் முதன்முதலாக காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
7 டிசம்பர் 1856:
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் குழந்தை வயதிலேயே கணவனை இழந்த திருமதி கலைமதி தேவிக்கும் சந்திர வித்யாரத்னா என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இந்தியாவில் நடந்த முதல் விதவைத் திருமணம் இது.
7 டிசம்பர் 1917:
தமிழ்த் தென்றல் திரு.வி.க.வை ஆசிரியராகக் கொண்டு தேசபக்தன் வார இதழ் வெளிவந்தது.
7 டிசம்பர் 1921:
ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டதற்காக சித்தரஞ்சன் தாசின் மனைவி வசந்தி தேவி, அவரது சகோதரி ஊர்மிளா தேவி மற்றொரு பெண் சுனிதி தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் லாரியில் அவர்களை ஏற்றும்போது சில இந்திய போலீஸ்காரர்கள் கண்கலங்கி தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தனர்.
7 டிசம்பர் 1939:
பின்னணிப் பாடகி எல். ஆர். ஈஸ்வரி பிறந்த நாள்.
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா...
எந்தக் கோவில் திருவிழா என்றாலும் இந்தப் பாடல் ஒலிபெருக்கியில் இடம்பெறும்.
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ...
இந்தப் பாடல் இசைக்காமல் திருமண விழாவே இருக்காது என்ற அளவில் புகழ் பெற்ற பாடல் இது.
இவையெல்லாம் எல்.ஆர்.ஈஸ்வரி பாடியவை.
பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள இவர் பக்திப்பாடல்களில் தனி முத்திரை பதித்தவர்.
லூர்துமேரி இராஜேஸ்வரி என்ற பெயரின் சுருக்கம் தான் L.R. ஈஸ்வரி.
7 டிசம்பர் 1971:
இந்தியா பாகிஸ்தான் போரில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் விமானப் படையை அடியோடு அழித்தது.

Comments
Post a Comment
Your feedback