3 டிசம்பர் 1833:
ஆண் பெண் இரு பாலரும் சேர்ந்து கல்வி பயில்வதற்கு ஓக்கியோவில் முதன்முதல் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது
3 டிசம்பர்1884:
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர், ‘டாக்டர் ராஜேந்திர
பிரசாத்’ பிறந்த நாள்.
3 டிசம்பர்1887:
ஸ்டாக் எக்சேஞ்ச் முதன் முதலில் நேட்டிவ் ஷேர் அண்டு ப்ரோக்கர்ஸ் அசோசியேசன் என்ற பெயரில் பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
3 டிசம்பர்1910:
முதன்முதலாக நியான் குழல் விளக்கு பாரிசில் நடந்த மோட்டார் கண்காட்சியில் எரிய வைத்து காண்பிக்கப்பட்டது
3 டிசம்பர்1912:
முதல் பால்கான் போரில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது
3 டிசம்பர்1919:
"இந்தியாவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை கொண்டு வருவதை என்னை விட வேறு எவரும் அவ்வளவு கடுமையாக எதிர்க்கவில்லை அது ஒரு இமாலய தவறு" என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மாண்டேகு என்று கூறினார்.
(பின்னாளில் அவரே அதை மாண்டேகு செம்ம்ஸ்போடு சீர்திருத்தம் என்ற பெயரில் முரண்பாடாக மாற்றிக் கொண்டார்.)
3 டிசம்பர் 1926:
மர்ம நாவல்கள் மூலம் உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியை அகதா கிறிஸ்டி மர்மமான முறையில் காணாமல் போனார்.
3 டிசம்பர் 1971:
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 14 நாள் போர் துவங்கியது. போரின் விளைவாக கிழக்கு பாகிஸ்தான் தனியாகப் பிரிந்து பங்களாதேஷ் என்ற தனி நாடு உருவானது
3 டிசம்பர் 1971:
தொலைக்காட்சியில் முதன் முதலில் ஆங்கில செய்தி ஒளிபரப்பப்பட்டது
3 டிசம்பர்1979:
இந்தியாவின் தலைசிறந்த ஹாக்கி வீரர் தயான் சந்த் காலமானார்.
3 டிசம்பர்1998:
கவிஞர் முடியரசன் மறைந்த நாள்.


Comments
Post a Comment
Your feedback