30 டிசம்பர் 1687
சென்னை நகர சபை துவக்கப்பட்டது.
30 டிசம்பர் 1691
பாயிலின் விதியை வகுத்து அளித்த புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயற்பியல் மற்றும் வேதியல் விஞ்ஞானி ராபர்ட் பாயில் லண்டனில் காலமானார்.
30 டிசம்பர் 1703
ஜப்பானில் ஈடோ என்று அழைக்கப்பட்ட இன்றைய டோக்கியோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 லட்சம் பேர் பலியானார்கள்.
30 டிசம்பர் 1879
ரமண மகரிஷி இன்றுதான் பிறந்தார்.
30 டிசம்பர்1931
பன்மொழிப் புலவரும் கான்கிரீட் கலவையில் ஏற்படும் சிக்கல்களை கணக்கிடக்கூடிய கால்குலோ கிராப் கருவியைக் கண்டுபிடித்தவருமான பா.வே.மாணிக்கவேல் நாயக்கர் காலமானார்.
30 டிசம்பர்1943
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தலைமை கமிஷனர் வீட்டில் இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றினார்.
30 டிசம்பர்1971
இந்திய விண்வெளி திட்டத்தின் நிர்மாண சிற்பி டாக்டர் விக்ரம் சாராபாய் திருவனந்தபுரத்தில் காலமானார்.
30 டிசம்பர் 2013
இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை அளித்து பெரும்புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் மறைந்த தினம்.

Comments
Post a Comment
Your feedback