Skip to main content

12 டிசம்பர்

 

12 டிசம்பர் 1760 

கான்சாகிபின் படை பூலித் தேவனின் நெற்கட்டான் சேவல் கோட்டையை தாக்கத் தொடங்கியது.

12 டிசம்பர்1882 

பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாவின் நாவல் ஆனந்த மடம் வெளியிடப்பட்டது. இந்த நாவலின் மூலம் தான் வந்தே மாதரம் பாடல் நாடெங்கும் பரவி பெரிய எழுச்சியை உருவாக்கியது .


 12 டிசம்பர்1923 

பத்திரிக்கைத் துறையை ஒரு வலிமையான ஆயுதமாக மாற்றிக் காட்டிய இந்து பத்திரிகை ஆசிரியர் கஸ்தூரி ரங்க ஐயங்கார் 64 வயதில் காலமானார்.

 12 டிசம்பர்1928 

ரஷ்ய எழுத்தாளர் சிங்கிஸ் அயித்மாத்தொவ்  பிறந்த தினம். 

இவர் எழுதிய எனது முதலாசிரியன்(The First Teacher) என்ற நூல் உலகப்புகழ் பெற்றது. 

 12 டிசம்பர்1931

தமிழ்த் திரையுலகின், முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்த சௌகார் ஜானகி பிறந்த நாள்.

 12 டிசம்பர்1932

திரைப்படப்  பாடலாசிரியரும், தயாரிப்பாளருமான ஆலங்குடி சோமு பிறந்த நாள். 

ஆண்டவன் உலகத்தின் முதலாளி.. அவனுக்கு நானொரு தொழிலாளி.. என்ற காலம் கடந்தும் புகழ்பெற்ற பாடல் இவர் எழுதியது தான். 

12 டிசம்பர்1940 

விடுதலைப் போராட்ட வீரரும், நாடகக் கலைஞருமான எஸ். எஸ். விஸ்வநாத தாஸ்  மறைந்த தினம். 

நாடக மேடையில் முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார். மரணத்தில் அவருக்கு கிடைத்த பெரும்பேற்றினை கௌரவப்படுத்த மயில் மீதமர்ந்த முருக வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

12 டிசம்பர்1965 

சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திய டாங்க் விஜயாந்தா ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

12 டிசம்பர்1992 

ஐதராபாத் நகரில் ஹுசைன் சாகர் ஏரியில் 320 டன் எடையும் 17.2 மீட்டர் உயரமும் உள்ள புத்தர் சிலை நிறுவப்பட்டது.


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...