Skip to main content

15 டிசம்பர்

 

 15 டிசம்பர் 1857 

அறிவியலில் ஏரோ டைனமிக்ஸ் (Aero Dynamics) எனும் புதிய துறை உருவாக காரணமாக இருந்த பிரிட்டிஷ் இயற்பியல் விஞ்ஞானி சார் ஜார்ஜ் கேலி இங்கிலாந்தில் காலமானார்.



 15 டிசம்பர்1862 

ஸ்டாம்ப்களுக்காக (For Stamp collectors) ஒரு பத்திரிக்கை தி மந்த்லி அட்வர்டைசர் என்னும் பெயரில் இங்கிலாந்தில் வெளிவர ஆரம்பித்தது.


 15 டிசம்பர்1932 
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றிய டி. என். சேஷன்  பிறந்த நாள். 

பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்று நினைத்துக்கொண்டிருந்த தேர்தல் கமிஷன் எவ்வளவு அதிகாரங்கள் கொண்டது என்று காட்டிய நேர்மையும் தீரமும் கொண்ட தேர்தல் கமிஷனர் இவர். இவரது பதவிக்காலத்துக்குப் பின்னரே தேர்தல் கமிஷன் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வந்தது.   
திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் என்பது அவரது பெயரின் விரிவாக்கம். 
 15 டிசம்பர்1950 

சிறுசிறு சமஸ்தானங்களாக சிதறி இருந்த இந்தியாவை ஒருங்கிணைத்தவரும் இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான, இரும்பு மனிதர்   சர்தார் வல்லபாய் பட்டேல் காலமானார்.

 15 டிசம்பர்1952 

தனி ஆந்திர மாநிலம் கோரி அக்டோபர் 20ஆம் தேதி முதல் சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் 57 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீ ராமுலு இன்று காலமானார்.

15 டிசம்பர்1955 

உலக அதிசயம் என்று வர்ணிக்கப்படும் ஒல்சன் கடிகாரம் டென்மார்க் தலைநகரான கோபன் ஹெஹனில் ஓட விடப்பட்டது. இக்கடிகாரத்தில் பதினைந்தாயிரம் பகுதிகள் உள்ளன

நட்சத்திரப்படியும் சூரியன் அடிப்படையிலும் நேரமும் ஒவ்வொரு நாளும் சூரியன் உதயமாகும் நேரம் அஸ்தமனம் ஆகும் நேரம், கிழமை, தேதி, அடுத்த 4000 ஆண்டுகளில் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் இடம், நேரம் ஆகியவற்றைக் காட்டக் கூடியது இந்தக் கடிகாரம்

இதில் உள்ள ஒரு குறிப்பிட்ட சக்கரம் ஒருமுறை சுற்றிவர 25700 ஆண்டுகள் ஆகுமாம். இன்னொரு சக்கரத்தின் சுற்று நேரமோ 400 ஆண்டுகள்.

 15 டிசம்பர்1959

 தபால் தந்தி துறை துவங்கப்பட்டது .

 15 டிசம்பர்1966

அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரும் கார்ட்டூன் படம் மூலம் உலகப் புகழ் பெற்றவருமான வால்ட் டிஸ்னி காலமானார்.


 15 டிசம்பர்1980 

தேசியப் பாதுகாப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...