16 டிசம்பர் 1928
மயிலை சீனி வேங்கடசாமி பிறந்த நாள்.
தமிழ் மொழியில் மறைந்து கிடந்த செய்திகளைத் தேடிக் கொணர்ந்தவர் மயிலை.சீனி வேங்கடசாமி.
ஒருமுறை 'யாப்பருங்கலவிருத்தி' என்னும் ஒரு நூலைப் படித்தார்.
இந்த நூலின் உரையாசிரியர், தமது உரை விளக்கத்தில், சில நூல்களை மேற்கோள்களாகக் கூறியிருந்தார். அந்த நூல்கள் தற்போது இருப்பதாகத் தெரியவில்லை.
இத்தகைய நூல்களின் பெயர்களைமட்டுமாவது தொகுத்து வெளியிட வேண்டும் என நினைத்து, அதனைச் செயல்படுத்தினார்.
மறைந்து போன தமிழ் நூல்கள் என்று ஓர் அரிய நூலைப் படைத்தார்.களப்பிரர் காலத் தமிழகம் என்னும் ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார்.
தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் என்றோர் நூலை எழுதி வெளியிட்டு, முதன்முதலில் அழகுக்கலைகள் பற்றித் தமிழில் எழுதிய பெருமை பெற்றார்.
கொங்கு நாட்டு வரலாறு,
துளுவ நாட்டு வரலாறு,
சேரன் செங்குட்டுவன்,
மகேந்திர வர்மன்,
நரசிம்ம வர்மன்,
மூன்றாம் நந்தி வர்மன்
ஆகிய நூல்கள் இவர் வழங்கியுள்ள வரலாற்றுப் படைப்புகள்.
பனகல் ராஜா காலமானார்.
16 டிசம்பர்1953
கரந்தை கவியரசு வெங்கடாசலம் பிள்ளை காலமானார்.
16 டிசம்பர்1965
புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான வில்லியம் சாமர் செட் மாம் காலமானார்.
16 டிசம்பர் 1971
இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் சரணாகதி பத்திரத்தில் கையெழுத்திட்டது.
அதனால் இன்று பங்களாதேஷ் உதயமானது.
16 டிசம்பர்1985
கல்பாக்கம் அணு உலை ராஜீவ் காந்தியால் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.
16 டிசம்பர் 1988
புகழ்பெற்ற எழுத்தாளரும் இலக்கிய விமர்சகர்மான க. நா. சுப்பிரமணியம் புதுடில்லியில் காலமானார்.



Comments
Post a Comment
Your feedback