17 டிசம்பர் 1897
பிரிட்டனில் முதன்முதலாக நடுக்கடலில் மார்க்கோனியால் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு வானொலி மூலம் செய்தி அனுப்பப்பட்டது
17 டிசம்பர் 1903
ஓகியோவைச் சேர்ந்த ஆர்வில் ரைட்டும் வில்பர் ரைட்டும் வட கரோலினாவில் உள்ள சிட்டி ஹாக் என்னும் இடத்தில் தாங்களே வடிவமைத்த 'காற்றை விட கனமான' விமானத்தில் பறந்து காட்டினார்கள்.
முதலில் ஆர்வில் 120 அடி உயரத்தில் 12 நொடிகள் பறந்தார்.
அடுத்து வில்பர் 852 அடி உயரத்தில் 59 நொடிகள் பறந்தார்.
இந்த விமானத்தின் எடை 340 கிலோ. மூன்று அமெரிக்கப் பத்திரிகைகள் மட்டுமே இந்த நிகழ்ச்சியை செய்தியாக வெளியிட்டன.
17 டிசம்பர்1918
தேசபக்தன் என்னும் பத்திரிகை திருவிகவால் ஆரம்பிக்கப்பட்டது.
17 டிசம்பர்1928
சைமன் கமிஷனை எதிர்த்து அக்டோபர் 30ஆம் தேதி லாகூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் தடியடி செய்ததில் லாலா லஜபதிராய்க்கு பலத்த அடிபட்டு அவர் நவம்பர் 17ஆம் தேதி காலமானார்.
லஜபதிராய் மரணத்திற்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்கார்ட்டை கொல்ல பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், ராஜகுரு ஆகியோர் முடிவு செய்தனர்.
ஸ்கார்ட் என்று நினைத்துக் கொண்டு சான்டர்ஸ் என்னும் போலீஸ் ஹெட் கான்ஸ்டபிளை லாகூரில் இன்று அவர்கள் சுட்டுக் கொன்றனர்.
Comments
Post a Comment
Your feedback