4 டிசம்பர் 1922:
தென்னிந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகரும், இசையமைப் பாளருமான கண்டசாலா பிறந்த தினம்.
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
என்ற பாடல் இன்றும் வசீகரிக்கும் பாடல்.
கண்டசாலாவும் லீலாவும் பாடிய பாடல் அது.
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே உள்ள சவுதப்பள்ளி அவருடைய சொந்த ஊர். முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்ட பெருமைக்குரியவர் இவர்.
இறுதிவரை தனது இசையாலும், குரலாலும் லட்சக்கணக்கானவர்களை மகிழ்வித்துவந்த கண்டசாலா 1974 பிப்ரவரி 11 அன்று 52-வயதில் மறைந்தார்.
4 டிசம்பர் 1925 :
சிட்னியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் நேரடி வர்ணனை முதன் முதலாக வானொலி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
4 டிசம்பர்1934:
இந்தியாவில் தினசரி விமான தபால் போக்குவரத்து ஆரம்பமானது.
4 டிசம்பர் 1948:
இந்திய ராணுவ தளபதியாக ஜெனரல் கரியப்பா பதவி ஏற்றார். இப் பதவியைப் பெற்ற முதல் இந்தியர் இவரே.

Comments
Post a Comment
Your feedback