6 டிசம்பர் 1799
கார்பன் டையாக்சைட்டை கண்டுபிடித்த ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜோசப் பிளாக் காலமானார்.
6 டிசம்பர் 1877:
தாமஸ் ஆல்வா எடிசன் தானே பாடி பதிவு செய்த மேரி ஹாட் எ லிட்டில் லேம்ப் (Mary had a little lamp) என்னும் இசைத்தட்டை முதன் முதலில் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் கிராமபோனில் போட்டுக் காண்பித்தார்.
6 டிசம்பர் 1934:
நடிகை சாவித்திரி பிறந்த நாள்.
நடிகையாக மட்டுமின்றி திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என முத்திரை பதித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருந்தார் சாவித்திரி.
6 டிசம்பர் 1951:
சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக சர் நரசிங் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவரே.
6 டிசம்பர் 1956:
சட்ட மேதையும் சுதந்திர இந்திய நிர்மாண சிற்பிகளில் ஒருவருமான அம்பேத்கர் காலமானார்.
6 டிசம்பர் 1982:
ஒப்பிலக்கியத் துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையான க. கைலாசபதி மறைந்த நாள். இலங்கைத் தமிழறிஞரான இவர் தமிழை உலக அரங்கில் கொண்டு சேர்த்தவர்.


Comments
Post a Comment
Your feedback