ஜனவரி 1, 1772
டிராவலர்ஸ் செக் என்னும் பயணிகள் காசோலை முதன்முதலாக லண்டனில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
ஜனவரி 1,1785
டைம்ஸ் நாளிதழ் பற்றி நமக்குத் தெரியும். உலகப் புகழ் பெற்ற நாளிதழ்களுள் இதுவும் ஒன்று. இந்த நாளிதழ் லண்டனிலிருந்து வெளி வருகிறது. அது இன்று தான் துவக்கப்பட்டது.
முதலில் யுனிவர்சல் டெய்லி ரெஜிஸ்டர் என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கா விடுதலை இயக்கத்திற்கு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் பிரெஞ்சு புரட்சிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவும் இதன் முதல் இதழ் வெளியானது. அப்போது இதனுடைய விற்பனை ஆயிரம் பிரதிகள் மட்டும்தான். இப்போதோ பல லட்சம் பிரதிகள் விற்கின்றன.
ஜனவரி 1,1842
சென்னையில் புதிய கலங்கரை விளக்கம் இன்றுதான் அமைக்கப்பட்டது.
ஜனவரி 1, 1877
இந்தியாவின் வைஸ்ராயான லிட்டன் பிரபு டில்லியில் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் மகாராணி என்று அறிவித்தார்.
ஜனவரி 1,1904
கார்களில் நம்பர் பிளேட் மாட்ட வேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்ட விதி முதன் முதலாக லண்டனில் இன்று அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
ஜனவரி 1,1919
இந்தியாவில் அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளை விசாரித்து அரசுக்கு அறிவுரை கூற பிரிட்டிஷ் நீதிபதி ரௌலட் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை இன்று வெளியானது. விடுதலை வீரர்களுக்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்கள் தான் ரௌலட் சட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஜனவரி 1,1921
காரில் பயண விவரக் குறிப்புகளை எழுதும் லாக் புக் இன்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜனவரி 1,1923
ரஷ்ய சோவியத் குடியரசு அதாவது USSR இன்று உதயமானது (யூனியன் அப் சோசியலிஸ்ட் சோவியத் ரஷ்யா)
ஜனவரி 1,1965
இந்திய உணவுக் கழகம் துவங்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback