31 டிசம்பர் 1599
கிழக்கு இந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்காக த கம்பெனி ஆப் மெர்சன்ஸ் ஆப் லண்டன் டிரேடிங் இன் டு தி ஈஸ்ட் இண்டீஸ் (The Company of Merchants of London Trading Into the East Indies) என்னும் கம்பெனி நிறுவப்பட்டது. இதுதான் 1833 ஆம் ஆண்டு ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்று குறிப்பிடப்பட்டது.
31 டிசம்பர்1600
இந்தியாவில் வாணிகம் செய்பவதற்காக கிழக்கு இந்திய கம்பெனிக்கு உரிமம் அளித்து இங்கிலாந்து மகாராணி ஆணை பிறப்பித்தார் 1858 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பிரிட்டிஷ் பிரதேசங்களில் நிர்வாகத்தையும் இதுதான் கவனித்து வந்தது.
31 டிசம்பர்1695
பிரிட்டனில் ஜன்னல் வரி என்ற ஒரு வரி விதிக்கப்பட்டது இதனால் பல வீடுகளில் ஜன்னல்களை செங்கற்கள் கொண்டு அடைத்து விட்டனர்.
31 டிசம்பர்1891
சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும் அறிவியலைக் கதை போல கூறியவருமான பெ.நா.அப்புசாமி காலமானார்.
31 டிசம்பர் 1915
புவியீர்ப்பு பற்றிய புதிய கொள்கையை ஐன்ஸ்டீன் வெளியிட்டார்
31 டிசம்பர்1921
இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
31 டிசம்பர்1923
பிபிசி முதன்முதலாக பிக் பென் (Big Ben) கடிகாரத்தின் மணியோசையை ஒலிபரப்பியது.
31 டிசம்பர்1938
கார் ஓட்டும் போது குடித்துவிட்டு ஓட்டுகிறார்களா என்பதை கண்டுபிடிக்க உதவும் ட்ரங்கோ மீட்டர் என்னும் கருவி இந்தியானா போலீஸ் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.
31 டிசம்பர்1985
இந்தியாவின் முதல் மொபைல் டெலிபோன் சர்வீஸ் டெல்லியில் ஆரம்பிக்கப்பட்டது.




Comments
Post a Comment
Your feedback